Web series: இரண்டரை மணி நேர படத்தை விரும்பி பார்ப்பதை தாண்டி தற்போது மக்களின் நாட்டம் வெப் சீரிஸ்கள் மீது அதிகம் வந்திருக்கிறது. ஒரு பயணத்தின் போது ஓய்வாக அமர்ந்து ஒரு சீரிசின் இரண்டு, மூன்று எபிசோடுகளை பார்ப்பது அலாதியான பிரியம் தான். அப்படி வெப் சீரிஸ் பார்க்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த ஆறு தமிழ் சீரிஸ்களை பார்த்து விடுங்கள்.
6 தமிழ் வெப் சீரிஸ்கள்
சூழல்: ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சூழல் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் இருக்கிறது.
ஒரு கிராமத்தில் திடீரென காணாமல் போகும் சிறுமி அவளை தேடும் சிறிய முயற்சியில் கிராமத்தில் நடக்கும் மிகப்பெரிய ரகசியங்களை கண்டுபிடிப்பது என நொடிக்கு நொடி திரில்லரான அனுபவத்தை கொடுக்கக் கூடிய சீரியஸ்.
வதந்தி: எஸ் ஜே சூர்யா முதல் முதலாக OTT தளத்தில் காலடி எடுத்து வைத்தது இந்த வதந்தி சீரிஸ் மூலம் தான். உண்மை நகரும், பொய் பறக்கும் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதைக்களம். இந்த சீரிஸை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மர்மமான கொலை மற்றும் அந்த கொலை உண்ட பெண்ணை சுற்றி பேசப்படும் வதந்திகள். இதைத் தாண்டி கொலையை எஸ் ஜே சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.
தலைமை செயலகம்: ஒரு நல்ல அரசியல் சதுரங்க விளையாட்டை பார்க்க ஆசைப்படுபவர்கள் தலைமைச் செயலகம் வெப் சீரிசை பார்க்கலாம். ஜீ தமிழ் OTT தளத்தில் வெளியான இந்த கதையில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.
பல ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து தமிழக முதல்வராக இருக்கும் கிஷோர் ஒரு ஊழல் வழக்கில் சிக்கிக் கொள்கிறார். மேலும் வட நாட்டில் 15 பேரை கொலை செய்த பெண் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு விஷயமும் ஒன்றாக இணையும் புள்ளிதான் இதன் கிளைமாக்ஸ்.
மாடர்ன் லவ் சென்னை: அமேசான் பிரைம் வீடியோவில் 2023 ஆம் ஆண்டு வெளியான வெப்சீரிஸ் மாடர்ன் லவ் சென்னை. அமெரிக்காவின் மாடர்ன் காதலை மையமாகக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட சீரிஸ் இது.
முதல் சீரிஸ் ஆறு அத்தியாயங்களைக் கொண்டு வெளியானது. இயக்குனர்கள் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜா குமாரராஜன், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் அக்ஷய் சுந்தர் இணைந்து இதை இயக்கி இருக்கிறார்கள்.
ஆனந்தம்: ஜீ 5 OTT தளத்தில் ரிலீசான சீரிஸ் ஆனந்தம். எழுத்தாளரான ஆனந்த் சின்ன வயதிலேயே தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறார்.
அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் வீடு திரும்பும் ஆனந்தன் அங்கு சுற்றி நடக்கும் காதல், நட்பு, திருமணம், துரோகம், ஏமாற்றம் என அத்தனையையும் பார்ப்பது போல் ஒரு நல்ல குடும்பத்தில் சீரிஸ் இது.
விலங்கு: விமல் நடிப்பில் ஜீ 5 OTT தளத்தில் ரிலீஸ் ஆன வெப் சீரிஸ் விலங்கு. போலீஸ் தொழிலையும் குடும்ப சூழ்நிலையையும் சமன்படுத்த முடியாமல் தவிக்கும் காவலராக விமல் நடித்திருப்பார்.
கிராமத்தில் நடக்கும் கொலையை கண்டுபிடிக்க இவர்கள் எடுக்கும் முயற்சி, அதை தொடர்ந்து நடக்கும் மர்ம நிகழ்வுகள் தான் இதன் கதை.