கீர்த்தி சுரேஷின் மாடர்ன் அவதாரம்.. கல்யாணத்துக்கு அப்புறம் இது கொஞ்சம் ஓவரால்ல இருக்கு

Keerthy Suresh: பொதுவாக நடிகைகள் திருமணம் ஆனால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு தான் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் அதிகம் இடம் பிடிக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவர் அணியும் உடை தான். திருமணம் முடிந்த கையோடு அவருடைய ஹிந்தி பட ப்ரமோஷனில் கழுத்தில் தாலியுடன் பயங்கர மாடர்னாக கலந்து கொண்டு நமக்கு ஷாக் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அது வைரல் ஆகிவிடும். ஏனென்றால் கீர்த்தி தற்போது விழாக்களில் கலந்து கொள்ள அணியும் உடை சர்ச்சை ரகமாக தான் இருக்கிறது.

கீர்த்தி சுரேஷின் மாடர்ன் அவதாரம்

அப்படித்தான் தற்போது அவருடைய சில போட்டோக்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட அவர் அணிந்திருந்த உடை இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தி ஏன் திருமணத்திற்கு பிறகு இப்படி மாறிவிட்டார். ஒரு வேளை திருமணம் ஆன நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது அரிது.

அப்படி கிடைத்தாலும் பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது. அப்படி ஒரு நிலை நமக்கு வந்து விடக்கூடாது என்றுதான் இப்படி எல்லாம் உடை அணிந்து வருகிறார் போல.

இதன் மூலம் பட வாய்ப்புகளை பிடிக்கவும் அவர் நினைத்திருக்கலாம். அதனால்தான் ரசிகர்களை டார்கெட் செய்து இப்படி உடை அணிந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கிறார்.

இது ஆடியன்ஸின் பொதுவான கருத்து. ஆனால் அதுதான் உண்மை என்று சொல்வது போல் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்தால் கூட கீர்த்தியின் உடை அப்படித்தான் இருக்கிறது என இணையவாசிகள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.