Overseas Business: தேவர் மகன் படத்தில் சிவாஜி ‘ விதை நான் போட்டது’ என்ற ஒரு வசனத்தை சொல்லுவார். அப்படித்தான் இப்போது தமிழ் சினிமாவிலும் நடந்து கொண்டிருக்கிறது.
சமீப காலங்களாக டாப் நடிகர்களின் படங்கள் ஓவர் சீஸ் வியாபாரத்தில் எவ்வளவு வசூலை எடுக்கிறது என்பதை சினிமா ரசிகர்களே உற்று நோக்க ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்திய தரவுகளின் படி ரஜினி மற்றும் விஜய் தான் இதில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள்.
ரூல் பண்ணிய அந்த நடிகர்
ஆனால் இதற்கு முன்னதாகவே ஓவர் சீஸ் வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தவர் கமலஹாசன். மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இவருடைய படங்கள் வசூலை வாரி குவித்திருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் கமல் தன்னுடைய படங்களில் நிறைய புது விஷயங்களை கொண்டு வந்தது தான்.
திரைக்கதை, படங்களில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், வித்தியாசமான கதைக்களம் என்பன கமலை ஓவர்சீஸ் வியாபாரத்தில் கலை கட்ட வைத்திருக்கிறது. ஆனால் இப்போதுதான் என்னவோ கமல் இதில் ரீ என்ட்ரி கொடுத்திருப்பது போல் பேசப்படுகிறது.
உண்மையில் ஆரம்ப காலகட்டத்தில் ஓவர்சீஸ் வியாபாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த கமல் அதில் நிலைக்காமல் போய்விட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
வியாபாரம், வசூல் என்பதை நோக்கி அவருடைய பயணம் இல்லாமல் தன்னுடைய கனவுப் படங்களை நோக்கி பயணப்பட்டது தான் இந்த இடைவெளிக்கு காரணம். இதற்கு சான்றுகளாக நாயகன், தேவர் மகன், ஹே ராம், இந்தியன் போன்ற படங்கள் ஆஸ்கார் தேர்வுக்கு சென்றதை சொல்லலாம்.