பெயருக்கு ஏற்ற வீரம் குறைந்த எதிர்நீச்சல்.. பிரஷர் ஏத்தி இல்லத்தரசிகளை குமுறவைக்கும் ஜீவானந்தம்

டிஆர்பி யில் என்னமோ முதலிடத்தில் தான் இருக்கிறது எதிர்நீச்சல். அதிரடிக்கு குறைவில்லாமல் போனாலும் நாடகத்தில் எதுவோ ஒன்று மிஸ் ஆகிறது. வரும் எபிசோடுகளில் ஜீவானந்தம் இதை சரி செய்தால் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

தான் பரோலில் வந்திருக்கிறேன் என்பதை மறந்துவிட்டு வீட்டுக்குள்ளேயே துப்பாக்கியுடன் தான் திரிகிறார் குணசேகரன். ஒரு கட்டத்தில் அனைவரையும் கீழே உட்கார வைத்து, மேல் நோக்கி சுடுகிறார். ஜனனியை தவிர மற்ற அனைவரும் பயந்து நடுங்குகிறார்கள்.

நாடகத்தின் பெயர் எதிர்நீச்சல். எப்பொழுதுமே வீட்டுப் பெண்கள் அடங்கிப் போவதை மட்டும் தான் பெரும்பாலான எபிசோடுகளில் காட்டுகிறார் ஜீவானந்தம். அவர்கள் என்னதான் நியாயத்தை பேசி சண்டை போட்டாலும் கடைசியில் குணசேகரன் கைதான் ஓங்கி நிற்கிறது.

தான் பரோலில் வெளிவந்திருக்கிறேன் என்பதை கூட உணராமல் குணசேகரன் துப்பாக்கியோடு அட்ராசிட்டி செய்கிறார். அவரை எளிதாக மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பி விடலாம் என்பது யாருக்கும் தோன்றுவதில்லை. இந்த ஒரு அடிப்படை விஷயம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

அப்படி யாரேனும் வாய் திறந்தால் குணசேகரன் அடங்கி விடுவார். இது தான் இப்பொழுது இல்லத்தரசிகளின் குமுறலாக இருக்கிறது. ஒவ்வொரு எபிசோடுகளிலும் தொடர்ந்து ஹைப்பை ஏற்றுவது தான் இயக்குனர் ஜீவானந்தத்தின் முதல் கவனமாக இருக்கிறது. மற்றபடி அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார்கள்.