கதறி அழுத அஜித்.. பிரசாந்தை ஓரம் கட்டி AK வெற்றி கண்ட படம்

Ajith : உங்க வாழ்க்கைய பாருங்க என் பின்னாடி சுத்தாதீங்க என்று அஜித் தனது ரசிகர்களை திட்டினாலும், இன்னும் அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் தனது திறமையை வெளிப்படுத்தி சினிமாவுக்கு வருவது என்பது அரிதுதான் இருந்தாலும் ஒரு தனி மனிதனாய் நின்று தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் சினிமாவில் சாதித்துக் காட்டிய ஒரே மனுஷன் அது அஜித் தான்.

அஜித்துக்கு தொடர்ந்து தோல்வி..

தனது கடும் முயற்சியாலும் பெரிய ஆர்வத்துடனும் அஜித் நடித்து வெளிவந்த ஆழ்வார் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான அசல், பில்லா 2 திரைப்படமும் தோல்வியை தான் தழுவியது. அதன்பின் தொடர்ந்து வெற்றியை பார்த்தா அஜித் இந்த வருடம் வெளியான விடாமுயற்சி திரைப்படத்திலும் மீண்டும் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

வெளியான உண்மை!

இந்நிலையில் 1999இல் வெளிவந்த ஆனந்த பூங்காற்றே படத்தின் தயாரிப்பாளர் அஜித்தை பற்றி பேசியது வைரலாகி வருகிறது.

கையை பிடிச்சு அழுத அஜித்..

ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் நடிக்க அஜித்தை அணுகினோம். அவர் படத்தில் நடிக்க 22 லட்சம் கேட்டார் அதையும் கொடுத்தோம். ஆனால் படத்தில் நடிக்க அஜித் 6 மாதம் இழுத்தடித்துவிட்டார். அப்போது அவருக்கு காலில் விபத்து ஏற்பட்டு சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது.

இயக்குனர் என்கிட்ட சொன்னது : ரொம்ப நாளாயிடும் படத்தை எடுத்து முடிக்க, நம்ம வேறொரு ஹீரோவை பார்க்கலாம் என்று சொன்னார்.

அப்போதுதான் நடிகர் பிரசாந்தை அணுகினோம், இதைத் தெரிந்து கொண்ட அஜித் மருத்துவமனையில் நாங்கள் பார்க்க சென்றபோது, நான் திரும்பி வர மாட்டேன்னு நினைச்சிட்டீங்களா அப்படின்னு அஜித் என் கையை பிடிச்சு அழுதாரு. இந்தப் படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று அஜித் சொன்னார். அதற்குப் பிறகு அவர் நடித்த அந்த படம் பயங்கர ஹிட் கொடுத்துச்சு – ஆனந்த பூங்காற்றே பட தயாரிப்பாளர்.