Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதா அருணுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முத்து சம்மதம் தெரிவித்து விட்டார். அந்த வகையில் சீதா வீட்டுக்கு முறைப்படி பொண்ணு பார்த்து பேசுவதற்காக அருண் மற்றும் அருண் உடைய அம்மா வருகிறார்கள். பொண்ணு விட்டு சார்பாக பேசுவதற்கு அண்ணாமலை முத்து மற்றும் மீனா இருக்கிறார்கள்.
அப்பொழுது நகை மற்றும் கல்யாணத்தைப் பற்றி பேசிய பிறகு அருண் போட்ட கண்டிஷன் என்னவென்றால் என்னுடைய கல்யாணத்துக்கு மேல் அதிகாரிகள் நிறைய பேர் வருவார்கள். அதனால் எனக்கு மரியாதை குறைச்சலாக எந்த விஷயமும் நடந்து விடக்கூடாது. முக்கியமாக கல்யாணத்திற்கு குடித்துவிட்டு யாரும் வரக்கூடாது என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் முத்து, பத்திரிக்கை கொடுக்கும் பொழுது எல்லோரிடமும் குடித்துவிட்டு வரக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும் என்று நக்கலாக பேச ஆரம்பித்து விட்டார். பிறகு அண்ணாமலை ஒரு வழியாக எல்லாத்தையும் சரி செய்துவிட்டு நல்லபடியாக பொண்ணு பார்க்கும் விஷயத்தை முடித்து வைத்தார். அத்துடன் மீதமுள்ள பணத்துக்கும் நகைக்கும் மீனா மற்றும் முத்து பொறுப்பேற்று இருக்கிறார்கள்.
அந்த வகையில் முத்து, கல்யாண செலவுகளை பார்த்து கல்யாணத்தை ஜாம் ஜாம் பண்ணி விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். மீனாவும் என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அதை வைத்து நகை வாங்குவதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். இதை வீட்டில் வந்து சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது சுருதி, சீதா கல்யாணத்திற்காக நான் மூன்று சவரன் செயின் போடுகிறேன் என்று சொல்கிறார்.
இதைக் கேட்டதும் ரோகிணி, சுருதியை தனியாக சந்தித்து எனக்கு ஒரு முக்கியமான செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்ட பொழுது இல்லை என்று என்னிடம் சொன்னீங்க. இப்பொழுது மீனா கேட்காமலேயே பணத்தை கொடுக்குறீங்க. அந்த அளவுக்கு நான் உங்களுக்கு வேண்டாதவளாக போய்விட்டதா என்று கேட்கிறார். அதற்கு ஸ்ருதி, நீங்க அத்தையை சமாளிப்பதற்காக பணம் கேட்டீங்க.
ஆனால் நான் மீனாவின் தங்கை கல்யாணத்திற்காக செய்யணும்னு ஆசைப்பட்டு செய்கிறேன். அத்துடன் மீனா உங்களை மாதிரி பணத்துக்கு ஆசைப்படுகிறவர் கிடையாது என்று சொல்லுகிறார். இதனால் ரோகினி மறுபடியும் சுருதியிடம் அசிங்கப்பட்டு கொண்டார். அடுத்ததாக ரோகிணி, ஷோரூம் இல் இருக்கும் பொழுது முருகனிடம் கொடுக்க வேண்டிய ஒரு லட்ச ரூபாயை கொடுத்து விடுகிறார்.
அந்த நேரத்தில் ரோகிணியை பிளாக் மெயில் பண்ணும் நபர் வந்து மொத்தமாக எனக்கு 10 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து செட்டில் பண்ணி விடு. இல்லையென்றால் முத்துவுக்கு போன் பண்ணி உன்னுடைய முதல் கல்யாணத்தை பற்றி சொல்லி விடுவேன் என்று பிளாக் மெயில் பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே பயந்து போன ரோகிணி அந்த நபரை சமாளித்து வெளியே அனுப்பி விடுகிறார். இனி இதற்காக என்ன பண்ணலாம் என்று மறுபடியும் ரோகிணி தில்லாலங்கடி வேலையை பார்க்கப் போகிறார்.