சிவகார்த்திகேயன் எப்படிப்பட்ட காரியவாதி தெரியுமா.? உண்மையை உடைத்து பேசிய பிரபலம்

Sivakarthikeyan: யாருடா இவன் அப்படினு மெரினா படத்தில் அறிமுகமாகி, இன்று தமிழ்நாடே கொண்டாடும் ஒரு தரமான நடிகராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.

முதலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன், தனது கடும் முயற்சியாலும் அபாரமான உழைப்பாலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அந்த வரிசையில் மான் கராத்தே, ரெமோ, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் ஒரு நல்ல மதிப்பை கொடுத்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2024 இல் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் கொடுத்து, அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்று சொல்லும் அளவிற்கு அந்தத் திரைப்படம் இவரை உயர்த்தி உள்ளது.

விஜய் கொடுத்த துப்பாக்கி..

கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த துப்பாக்கியை பார்த்து ரசிகர்கள் அதை பிரபலமாக்கினார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயனை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி பேசியது பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

காரியவாதி-சிவகார்த்திகேயன்..

கோட் படத்தில் சிவகார்த்திகேயனை நம்பி தான் விஜய் துப்பாக்கி கொடுத்தார். எனக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று மறைமுகமாக அவர் இதன் மூலம் சொல்லியிருக்கிறார்.

ஆனால் திமுக சிவகார்த்திகேயனின் படத்தை வைத்து, விஜயை காலி செய்ய நினைக்கும் போது, என்னுடைய படத்தில் இதை பண்ணாதீங்க ஏனென்றால் விஜய் என் மீது அதிக அன்பு வைத்துள்ளார் என்று சிவகார்த்திகேயன் சொல்லி இருக்க வேண்டும் ஆனால் அதை அவர் சொல்லவில்லை – வலைப்பேச்சு பிஸ்மி”