புத்தம் புது சீரியலில் அபிக்கு ஜோடியாக வரும் கயலின் தம்பி.. ராதிகாவை கூட்டிட்டு வந்த விஜய் டிவி

Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு மக்கள் தொடர்ந்து பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் சிறகடிக்கும் ஆசை மற்றும் அய்யனார் துணை சீரியல் இடம் பெற்றது. இன்னும் போகப்போக சன் டிவிக்கு போட்டியாக முதல் இரண்டு இடங்களிலும் வந்துவிடும்.

அந்த அளவிற்கு தற்போது அய்யனார் துணை சீரியல் மக்களின் ஃபேவரிட் சீரியலாக வெற்றி பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பாக்யா சீரியல் ஆரம்பத்தில் மக்கள் தூக்கி கொண்டாடும் நாடகமாக இருந்தது. ஆனால் ஐந்து வருடங்கள் ஆனதால் கதை எதுவும் இல்லாமல் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்து அடித்துக் கொண்டே போகிறார்கள்.

இதனால் எப்பொழுது இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் இப்போதைக்கு பாக்கியலட்சுமி சீரியலை முடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்து விட்டது. ஆனாலும் அதற்கு பதிலாக புத்தம் புது சீரியலை அடுத்தடுத்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஸ்டார்மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் மகுவா ஓ மகுவா என்ற சீரியலை தமிழில் ரீமேக் செய்யப் போகிறார்கள். இதில் கதாநாயகியாக நீ நான் காதல் என்ற சீரியல் மூலம் அறிமுகமான அபி என்கிற வர்ஷினி என்பவர் கமிட் ஆகி இருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக கயல் சீரியலில் கயலின் தம்பியாக நடித்த நடிகர் அவினாஷ் என்பவரும் இணைந்திருக்கிறார். இவர் விஜய் டிவியில் சமீபத்தில் முடிந்து போன வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்ததன் மூலம் அனைவரது வரவேற்பையும் பெற்றார். அந்த வகையில் முதன் முதலாக ஹீரோ கதாபாத்திரம் இவருக்கு கிடைத்திருக்கிறது.

மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ராதிகா என்கிற ரேஷ்மா என்பவரும் கமிட்டாகி இருக்கிறார். இந்த சீரியல் இன்னும் கூடிய விரைவில் விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாக போகிறது.