விஜய் கூட படம் பண்ணாததுக்கு இதுதான் காரணம்.. பல வருட ரகசியத்தை சொன்ன சுந்தர் சி

Sundar C: இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஜய்யுடன் இணைந்து எதற்காக இதுவரை பணிபுரியவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அறிமுக படமான முறைமாமன் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார் சுந்தர்சி.

இதைத் தொடர்ந்து கலந்து வரும் இயக்குனராக இருக்கும்போதே ரஜினியுடன் இணையும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ரஜினியின் மாஸ், அசத்தலான காமெடி என அருணாச்சலம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

ரகசியத்தை சொன்ன சுந்தர் சி

அதே மாதிரி கமலுக்கு இவர் கொடுத்த அன்பே சிவம் படம் கமலின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாகும். அஜித்துடன் இணைந்து உன்னை தேடி படத்தை இயக்கியிருந்தார். இப்படி டாப் ஹீரோக்களை இயக்கிய சுந்தர் சி விஜய்யுடன் மட்டும் இணைந்து படம் பண்ணவே இல்லை.

இதற்கு அவர் சொன்ன காரணம் தான் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் விஜயகாந்துக்கு பிறகு முழு கதையையும் கேட்டு நடிக்க கூடிய நடிகர் விஜய். நான் பொதுவாக ஐந்து நிமிடத்தில் படத்தின் கரு என்ன என்பதை சரியாக சொல்லி விடுவேன்.

ஆனால் எனக்கு இரண்டரை மணி நேர பட கதையை சொல்ல வராது. விஜய்க்கு படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை முழுவதுமாக கதை சொல்ல வேண்டும். இந்த திறமை எனக்கு இல்லாததால் தான் நான் விஜய்யை வைத்து இயக்கும் முயற்சியை எடுக்கவே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

காமெடி மசாலா கதைகளில் பேர் போனவர் சுந்தர் சி. அதே மாதிரி விஜய்க்கு காமெடி இயல்பாகவே அசால்டாக வரும். இந்த இருவர் கூட்டணியில் ஒரு படம் வெளியாகி இருந்திருந்தால் கண்டிப்பாக இரண்டு பேரில் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ட்ரீட் ஆக இருந்திருக்கும்.