Serial: சன் டிவியில் உள்ள சீரியல்கள் எல்லாமே மக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைத்துவிடும் என்பது தான் நிதர்சன உண்மை. அதனால் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று பல கலைஞர்கள் ஏங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்படி வாய்ப்பு கிடைத்த பலரும் சின்னத்திரை மூலம் அவர்களுடைய திறமைகளை காட்டி அடுத்தடுத்த வெற்றியை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அப்படித்தான் சன் டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் தற்போது விஜய் டிவி சேனலுக்கு தாவி அதன் மூலம் அதிர்ஷ்டத்தை பார்த்து வருகிறார். அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் நடிக்காமல் போய்விட்டார்.
அதனால் மதுமிதாவை மிஸ் பண்ணுகிறோம் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்தார்கள். ஆனால் மதுமிதா, சன் டிவி சீரியலில் இருந்து எஸ்கேப் ஆகி விஜய் டிவி சீரியலான அய்யனார் துணை என்ற புத்தம்புது சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நிலா கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவருடைய கேரக்டர் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். இன்னும் சொல்ல போனால் நல்ல வேலை எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் நடிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார். அப்படி நடித்திருந்தால் இவருடைய கேரக்டர் டேமேஜ் ஆகியிருக்கும். ஏனென்றால் அந்த அளவிற்கு எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் மொக்கையாக போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் எதிர்பார்க்காதபடி அய்யனார் துணை சீரியல் மக்களின் ஃபேவரிட் சீரியலாக மாறிவிட்டது. அதனால் தான் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியலை ஓரங்கட்டி அய்யனார் துணை சீரியல் டாப் 5 இடத்தை பிடித்திருக்கிறது.