ரஜினியே வீடு தேடி வந்தாலும் படம் பண்ண மாட்டேன்.. ஷங்கர் ஏன் அப்படி சொன்னார்.?

Rajinikanth: சூப்பர் ஸ்டாரை வைத்து படம் பண்ண வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு. அப்படி இருக்கும் போது ஷங்கர் ரஜினியே வீடு தேடி வந்தாலும் படம் பண்ண மாட்டேன் என சொல்லி இருக்கிறார்.

ஆனால் இவர்கள் கூட்டணியில் சிவாஜி, எந்திரன், 2.o என படங்கள் வந்திருக்கிறது. அப்படின்னா இந்த சம்பவம் எப்போது நடந்தது என உங்களுக்கு தோன்றலாம். இது குறித்து ஏவிஎம் தயாரிப்பாளர் சரவணன் விளக்கியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் சிவாஜி படம் ஆரம்பித்தது பற்றி கூறியிருக்கிறார். அதில் அவர் ஒரு முறை ரஜினியிடம் பேசும் போது ஷங்கருடன் படம் பண்ணுவது பற்றி கூறியிருக்கிறார். ஆனால் தலைவர் சங்கர் என்னோட படம் பண்ண மாட்டார்.

ஷங்கர் ஏன் அப்படி சொன்னார்.?

ரஜினியே வீடு தேடி வந்து கேட்டாலும் நான் படம் பண்ண மாட்டேன் என அவர் சொன்னதாக வைரமுத்து கூறியிருக்கிறார். இதை தெரிந்து கொண்ட ரஜினி, சங்கரிடம் கேட்டு அவர் மறுத்துவிட்டால் எனக்கு ஒரு மாதிரி இருக்கும் அதனால் வேண்டாம் என்று சரவணனிடம் சொன்னாராம்.

ஆனால் அதற்கு நேர் மாறாக சங்கர் ஏவிஎம் நிறுவனத்திடம் என்னுடன் படம் பண்ணுவதற்கு ரஜினி சார் ஒப்புக்கொள்வாரா என தயங்கி இருக்கிறார். இதிலிருந்தே இடையில் யாரோ விளையாடியிருக்கிறார்கள் என தெரிகிறது.

அதன் பிறகு பார்த்தால் ஷங்கர் ரஜினி இருவரும் திடீரென மீட்டிங் போட்டு தயாரிப்பாளரையும் வரச் சொல்லி படத்தை ஓகே பண்ணியிருக்கிறார்கள். இப்படித்தான் சிவாஜி படம் தொடங்கியதாக சரவணன் கூறியுள்ளார்.

ஆனால் சங்கர் இப்படி எல்லாம் சொல்லி இருப்பாரா என்று ஆச்சரியமாக தான் இருக்கிறது. இதில் வைரமுத்து எதுவும் வேலையை காட்டி விட்டாரோ என ரஜினி ரசிகர்கள் சந்தேகமாக கேட்டு வருகின்றனர்.