Red Giant: ஆடு தானாய் கசாப்பு கடையில் வந்து நிற்பதற்கு சமமாய் ஆகிவிட்டது ஜனநாயகன் படத்தின் நிலைமை. விஜய் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்த பிறகு நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜனநாயகன்.
அது மட்டும் இல்லாமல் ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் தீவிர அரசியல் என விளையாடிக் கொண்டிருக்கிறார் விஜய். படம் எடுத்து முடித்தாலும் அதை வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
வசமாய் சிக்கிய விஜய்
கோலிவுட் சினிமாவை பொறுத்த வரைக்கும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பஞ்சாயத்து தலைவர் போல் இருக்கிறது. அதாவது எந்த படம் எப்போ ரிலீஸ் ஆக வேண்டும், எந்த படம் எந்த தியேட்டரில் போட வேண்டும் என்பதை கூட இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.
பெரிய பெரிய நடிகர்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தை கூட ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஆபீஸில் தான் பேசி முடிக்கிறார்கள். தற்போதைக்கு இந்த நிறுவனத்தின் ஆதரவின்றி எந்த படத்தையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியாது என்ற நிலைமை.
முதலில் ஜனநாயகன் படத்தை ரோகிணி பிக்சர்ஸ் வாங்குவதாக இருந்தது. அவர்கள் பின்வாங்கிய பிறகு டான் பிக்சர்ஸ் உள்ளே வந்தது. தற்போது எந்த நிறுவனமும் ஜனநாயகன் படத்தின் விநியோகஸ்த உரிமையை வாங்க முன்வரவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவது என்பது விஜய்க்கு கடனை நீந்தி கடக்கும் நிலைமையாக தற்போது இருக்கிறது.