ஸ்ரீகாந்த் பேச்சை கேட்டு கடனாளி ஆனேன்.. தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்

Srikanth: போ..தை மருந்து பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்ரீகாந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து திரையுலகில் பல பேர் சிக்க போகிறார்கள் என்ற தகவல் பரப்பரப்பை கிளப்பி வருகிறது.

இந்த சூழலில் ஸ்ரீகாந்த் பேச்சை கேட்டு கடனாளியாக சிக்கித் தவித்ததை வலைப்பேச்சு அந்தணன் மனக்குமுறலுடன் தெரிவித்துள்ளார். வலைப்பேச்சு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் இவர்.

நயன்தாரா தனுஷ் என முக்கிய பிரபலங்கள் பற்றி இவர் சொல்லும் கமெண்டுக்கு ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விடுவார்கள். இருந்தாலும் இவர் அவ்வப்போது சினிமாவில் நடக்கும் பல விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார்.

தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்

இந்த சூழலில் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்தை வைத்து கிழக்கு கடற்கரை சாலை படத்தை தயாரித்து இருந்தார். அந்த பட வெளியீட்டின் போது எல்லா ஏரியாக்களிலும் படத்தை விற்று விட்டாராம்.

ஆனால் மதுரை ஏரியாவை விற்க முற்படும்போது ஆஸ்கர் ரவிக்கு இந்த உரிமையை கொடுங்க என ஸ்ரீகாந்த் சொல்லி இருக்கிறார். ஆனால் ஏற்கனவே ரவி பல படங்களை வாங்குகிறேன் என்று சொல்லி கடைசி நிமிடத்தில் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் அந்தணன் தயங்கி இருக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்து அந்த ஏரியாவை விற்காமல் வைத்திருந்தாராம். பட ரிலீசுக்கு இரண்டு நாள் முன்பு வரை இதோ அதோ என்று ரவி இழுத்திருக்கிறார்.

அதன் பிறகு 18 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க முடியாது என்று ஜகா வாங்கி விட்டாராம். இதனால் அந்தணன் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அந்த உரிமையை பெற்றுள்ளார். இந்த கடனிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆனது.

அதன் பிறகு படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஸ்ரீகாந்த் பற்றிய சர்ச்சை தற்போது ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரமும் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.