இந்த மாதம் முழுக்க அப்டேட் திருவிழா தான்.. ஆடியோ லாஞ்சில் அரசியல் பேசுவாரா தலைவர்.?

Coolie-Rajini: 2025 தொடங்கி ஆறு மாதங்கள் முடிவடைந்து விட்டது. ஃபர்ஸ்ட் ஆஃப் பொருத்தவரையில் கோலிவுட்டில் பல படங்கள் வெற்றிவாகை சூடி இருக்கிறது. அதேபோல் தயாரிப்பாளரும் லாபம் பார்த்துள்ளனர்.

ஆனால் இரண்டாம் பாதியில் தான் பல முக்கிய படங்கள் வெளிவர இருக்கிறது. அதற்கான அப்டேட் இந்த மாதம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் லோகேஷ், ரஜினி கூட்டணியின் கூலி ஆகஸ்ட் 14 ரெடியாகிறது. கடந்த மாதமே டிஜிட்டல் ப்ரோமோஷனை சன் பிக்சர்ஸ் தொடங்கிவிட்டது. அதேபோல் முதல் சிங்கிள் பாடலும் பட்டையை கிளப்பியது.

ஆடியோ லாஞ்சில் அரசியல் பேசுவாரா தலைவர்.?

அதைத்தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் ஆடியோ லான்ச் என இந்த மாதம் தலைவருக்கானது தான். அதிலும் இசை வெளியீட்டு விழாவில் அவர் தற்போது திரையுலகிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி நிகழ்ந்து வரும் சம்பவங்கள் குறித்து பேசுவாரா என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கிறது.

அதேபோல் விஜய் குறித்து அரசியல் ரீதியாக எதுவும் பேசுவாரா என மீடியாக்கள் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் கூலி இசை வெளியீட்டு விழா நிச்சயம் ஸ்பெஷல் கன்டென்ட் ஆக இருக்கும்.

அதை அடுத்து செப்டம்பர் 5 வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் மதராஸி பட ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த மாதம் வெளிவர இருக்கிறது. மேலும் சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியின் STR 49 படத்தின் அறிவிப்பு வீடியோவும் இந்த மாதம் வெளி வருகிறது.

அடுத்தபடியாக சூர்யா பிறந்தநாள் ஆன ஜூலை 23 அன்று கருப்பு படத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியாக உள்ளது. அதேபோல் ஜூலை 28 தனுஷ் பிறந்தநாள் அன்று இட்லி கடை படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

அது மட்டும் இன்றி அவரின் புது பட அறிவிப்பு வரவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக இந்த ஜூலை மாதம் ரசிகர்களுக்கு மிக ஸ்பெஷலாக இருக்கப் போவதில் சந்தேகம் இல்லை.