Ajith : அஜித், ஆதிக் வெற்றி கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். ஒரு ஃபேன் பாயாக குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய நிலையில் ஒரு கதையைக் கொண்டு முழு படமாக அடுத்த படத்தில் எடுக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களினால் இந்த கூட்டணி அமையவில்லை. இதற்கு காரணமாக சில விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. அதாவது அஜித் இந்த படத்திற்கு 180 கோடி சம்பளமாக கேட்டதாக சொல்லப்படுகிறது.
விஜய் மற்றும் ரஜினி அஜித்தை விட இப்போது அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார்கள். மேலும் விடாமுயற்சி தோல்வி படமாக இருந்தாலும் குட் பேட் அக்லி ஒரு நல்ல வெற்றியை கொடுத்ததால் தனது சம்பளத்தை அஜித் உயர்த்தி இருக்கிறார்.
அஜித் போட்ட கண்டிஷனால் விலகிய ஐசரி
மற்றொருபுறம் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது 10 இயக்குனர்களை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்க உள்ளது வேல்ஸ் நிறுவனம். ஆகையால் இதற்கே பிரம்மாண்ட பட்ஜெட் போட முடியாது என்பதற்காக இந்த படத்தில் இருந்து விலகி உள்ளது.
வேல்ஸ் நிறுவனம் விலகியதால் மற்ற நிறுவனங்களும் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தற்போது அட்லீ, அல்லு அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. லைக்கா மீண்டும் புத்துணர்வுடன் இப்போது தான் சில படங்களை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறது.
இவ்வாறு பெரிய நிறுவனங்கள் எல்லாம் மிகப்பெரிய பட்ஜெட்டில் கமிட்டானதால் ஏகே 64 படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அஜித் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என்ற ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். விரைவில் ஏகே 64 படத்தை இந்த நிறுவனம் கைப்பற்றுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.