விஜய்யால், விஜய் சேதுபதி மகனுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி.. இது என்ன சூயிங்கம் ஹீரோவுக்கு வந்த சோதனை!

Vijay: உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்றது தான் விஜய் சேதுபதியின் மகனுக்கு விஜய்யால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. என்று சொல்வதும் விஜய் தன்னுடைய சக போட்டியாளர்களையே உதறி தள்ளிவிட்டு சினிமாவில் இருந்து விலகுகிறார்.

அப்படி இருக்கும்போது சூர்யா சேதுபதி உடன் இவருக்கு என்ன பிரச்சனை இருக்கும் என எல்லோருக்குமே தோன்றும். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார்.

ஹீரோவுக்கு வந்த சோதனை!

இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் கதை களத்தை கொண்டது. இந்த படத்தில் நிறைய இடங்களில் விஜய் கட்சியின் கொடி சாயலில் கொடிகள் இருந்திருக்கிறது. இதற்கு பிரச்சனை பண்ணியது தமிழக வெற்றி கழகம் கட்சி இல்லை.

சென்சார் தரப்பிலிருந்து இந்த மாதிரி கொடி படத்தில் இருக்கக் கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் இந்த கொடிகள் எல்லாம் இருக்கும் காட்சிகளில் இருந்து அதை நீக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தான் படம் ரிலீஸ் ஆவதில் கால தாமதம் ஏற்பட்டதாக இயக்குனர் அனல் அரசு தெரிவித்திருக்கிறார்.