Vignesh Shivan: ஒரே இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் மொத்தமாய் டேமேஜ் ஆகி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான் பண்ணுவீங்களா டைரக்டர் சார் என நெட்டிசன்கள் அவரை நெம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பல வித்தியாசமான நடனங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்தவர் தான் ஜானி மாஸ்டர். தளபதியின் வாரிசு படத்தில் இவர் பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜானி மாஸ்டர் பெண் வன்கொடுமை வழக்கில் சிறைக்கு சென்றிருந்தார்.
இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி
தற்போது இவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது போல. இயக்குனர் விக்னேஷ் சிவன் , ஜானி மாஸ்டருடன் எடுத்த புகைப்படத்தை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்திருந்தார்.
இதை தற்போது சின்மயி பகிர்ந்து எதற்காக இந்த மாதிரி ஆட்களை பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் என்றால் அல்வா சாப்பிடுவது போல் சமூக வலைத்தளத்தில் உபயோகப்படுத்துவார்கள். வீட்டில் இப்போது இந்த கண்டன்டு கிடைத்ததால் வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள்.