அப்பா வேற, நா வேற எல்லாம் சும்மா கதை.. நெப்போடிசத்தில் திளைக்கும் சூர்யா சேதுபதி

Surya Sethupathi: விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நடித்திருக்கும் பீனிக்ஸ் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் துவக்க விழாவிலேயே அப்பா வேற, நான் வேற அப்பாவுக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று பேசி இருந்தார்.

இந்த அப்பா வேற நான் வேற என்ற டயலாக் சமூக வலைத்தளம் முழுக்க ட்ரோல் மெட்டீரியலும் ஆனது. உண்மையில் முழுக்க முழுக்க சூர்யா சேதுபதி நெப்போடிசத்தில் திளைத்துக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

நெப்போடிசத்தில் திளைக்கும் சூர்யா சேதுபதி

இரண்டு தினங்களுக்கு முன்பு பபுள்கம் மென்று கொண்டு பிரமோஷன் விழாவில் ஓவர் ஆட்டிடியூட் காட்டியது எல்லோருக்கும் நினைவிருக்கும். இதே மாதிரி குக் வித் கோமாளி அஸ்வின் கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டியதாலே அவருடைய சினிமா வாய்ப்புகள் மொத்தமும் பறிபோனது.

ஆனால் சூர்யா சேதுபதியை பற்றி நெகட்டிவிட்டி கிளம்பியதும் விஜய் சேதுபதி பிரிவியூ பார்த்துவிட்டு பேட்டி கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் சூர்யா சேதுபதியை ட்ரோல் செய்யும் வீடியோக்களை நீக்குமாறு மீடியாக்களுக்கு அழைப்பு போய் இருக்கிறது.

போதாத குறைக்கு தளபதி விஜய் தன்னுடைய மகன் இயக்கும் படத்தின் விழாக்களிலேயே கலந்து கொள்ளவில்லை. ஆனால் இன்று சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் படத்தை பிரமோஷன் செய்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் மகன் என்பதாலே மட்டுமே விஜய் இதற்கு நேரம் ஒதுக்கி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது .இருந்தாலும் இவ்வளவு செல்வாக்குடன் சினிமாவுக்குள் வந்தால் கண்டிப்பாக கடின உழைப்பு என்று ஒன்று இருப்பது சூர்யா சேதுபதிக்கு மறந்து போய்விடும்.

எந்த கடின உழைப்பால் இன்று விஜய் சேதுபதி இந்த இடத்தில் இருக்கிறாரோ அதை தன் மகனுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்துவிட்டார்.