Blue Sattai Maaran : சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை பயப்படாமல் பதிவு போடக்கூடியவர். அவருடைய விமர்சனம் சரியாக இருப்பதாக பலரும் அவரது விமர்சனத்தை பார்த்து விட்டு தான் திரையரங்குகளுக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது.
இந்த சூழலில் தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் லாக்கப் மரணத்திற்கு திரைதுறையில் பெரிதாக யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. விஜய் மட்டும் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார். அண்மையில் சூர்யா, சிவகார்த்திகேயன், சத்யராஜ் போன்றோர் இதுகுறித்து ஏன் எதுவும் கூறவில்லை என்றும் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார்.
இப்போது தமிழ் சினிமாவில் ஒரே ஆண்மகன் ராஜ்கிரண் தான் என்று பாராட்டி இருக்கிறார். அதாவது ராஜ்கிரண் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் குமாரின் மரணம் குறித்து அதை வெளிப்படுத்தி இருந்தார். அஜித் குமாரை காவல்துறையினர் அடித்தே கொன்ற கொடுங்கொலையை நினைக்க நினைக்க நெஞ்சம் பதறுகிறது, ரத்தம் கொதிக்கிறது என்று பதிவு போட்டிருக்கிறார்.
அஜித்குமார் சம்பவத்தில் ஆதங்கப்பட்ட நடிகர்

மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த நிகிதா என்ற பெண்ணை கைது செய்து விசாரித்ததாக தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இங்கு என்ன நடக்கிறது, ஏழை எளியவர்கள் என்றால் உடனே பாயும் சட்டம், அதிகார வர்க்கத்திற்கு வேண்டியவர்கள் என்றால் பம்முமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மக்கள் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு என்று ராஜ்கிரண் போட்டிருக்கும் பதிவு இப்போது பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் அஜித் குமாரின் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இதுவரை பல லாக்கப் மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இனி இது போன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. விசாரணை என்பது கட்டாயம் என்றாலும் போலீசாரின் அத்துமீறல் சில மோசமான எதிர்வினையை கொடுக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக சில சம்பவங்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.