இதுவா உங்க பரிசு.. ஜொள்ளு கவிஞருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த பாட்டி

Gossip: அந்த கவிஞரின் மீது ஏகப்பட்ட பிராது இருக்கிறது. ஆனால் அவர் நேக்காக இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். ஆனாலும் அந்தப் பாடகி இவர் முகத்திரையை தொடர்ந்து கிழித்து வருகிறார்.

அவரை விடுங்க இந்த பாடகி சொல்றத கேளுங்க என்பது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சர்ச்சை பாடகியான இவர் ஒளிவு மறைவு இல்லாமல் திரையுலகில் நடக்கும் சம்பவங்களை வெட்ட வெளிச்சமாக்கி விடுவார்.

அப்படித்தான் அந்த கவிஞரின் இன்னொரு முகத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். அதாவது அந்த கவிஞர் தவறான நோக்கத்தோடு இந்த பாடகியை வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

இதுவா உங்க பரிசு

எப்படி என்றால் உங்களுக்கு ஒரு பரிசு தரேன் என்று சொல்லி வர சொன்னாராம். உடனே உஷாரான பாடகி தன் பாட்டியை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத அந்த கவிஞர் பொதுவாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால் பாட்டி அவருக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஏதோ பரிசு தரேன்னு சொன்னீங்களாமே எங்க அது என பட்டுன்னு கேட்டிருக்கிறார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த கவிஞர் உடனே வீட்டிலிருந்த ஷாம்பு பாட்டில் கொண்டு வந்து பாடகியிடம் கொடுத்தாராம். இதுவா அந்த பரிசு என பாட்டியும் பேத்தியும் தலைசுற்றிப் போயிருக்கின்றனர்.

ஆனால் பாடகிக்கு கவிஞர் எதற்கு வரச் சொன்னார் என்று நன்றாகவே தெரியும். அதனால் தான் பாட்டியை துணைக்கு அழைத்து சென்றிருக்கிறார். இந்த விஷயத்தை கேட்ட அனைவரும் கவிஞர் செய்த சேட்டையை நினைத்து வயிறு வலிக்க சிரிக்கின்றனர்.