Mirchi Siva : ஜூலை நான்காம் தேதியான நேற்று போட்டிக்குப் போட்டுக்கொண்டு நிறைய படங்கள் வெளியானது. அந்த வகையில் சித்தார்த்தின் 3BHK, சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ், மிர்ச்சி சிவாவின் பறந்து போ மற்றும் கீர்த்தி பாண்டியனின் அஃக்கேனம் ஆகிய படங்கள் வெளியானது.
எல்லா படத்திற்குமே நேர்மையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் மக்கள் கூட்டம் சராசரியாக இருந்தது. இதனால் படத்தின் வசூலிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் சராசரியாக தியேட்டர் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் படத்திற்கான வசூலும் சராசரியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நேற்று வெளியாக இருந்தது பறந்து போ படம்.
பறந்து போ முதல் நாள் கலெக்ஷன்
இந்த படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பெற்றோர்களின் கண்காணிப்பில் பிள்ளைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்ச்சி பூர்வமாகவும் நகைச்சுவையுடனும் இயக்குனர் கொடுத்து இருந்தார்.
மேலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்த பறந்து போ படம் முதல் நாளில் 42 லட்சம் வசூலை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள பீனிக்ஸ் படம் 10 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதைத்தொடர்ந்து சித்தார்த்தின் 3BHK படம் முதல் நாளே கிட்டத்தட்ட ஒரு கோடி வசூலை பெற்றிருக்கிறது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பறந்து போ படத்தில் கிடைக்கும் நேர்மையான விமர்சனங்களால் வசூல் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.