எதிர்நீச்சல் குணசேகரனின் மொத்த குடிமியையும் பிடித்து சர்வத்தையும் அடக்கி விட்டார் ஈஸ்வரி. எனக்கு தர்ஷன் தான் எல்லாம். பெண் பிள்ளையை விட ஆண் பிள்ளை மீது தான் எனக்கு உசுரு என குணசேகரன் கெஞ்சி கூத்தாடியதை நேற்று பார்க்க முடிந்தது.
தர்ஷனை தூக்கிப்போட்டு மிதித்த குணசேகரன், இப்பொழுது என் மகன் வேண்டும் என கண்ணீர் மல்க நிற்கிறார். அப்பா அடித்து விட்டார் என வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன் கொடைக்கானல் பக்கம் செல்கிறார். அங்கே எதேர்ச்சியாக ஜீவானந்தத்திடம் தஞ்சம் அடைகிறார்.
இதை அறிவுக்கரசி மூலம் அறிந்த குணசேகரன் தனது மனைவி ஈஸ்வரி இடம் வந்து தர்ஷனை எப்படியாவது வரச் சொல்லு என கெஞ்சி கதறுகிறார், அவன் உங்களை பற்றி தெரிந்து கொண்டான் நீங்கள் நல்ல அப்பாவாக இருந்தால், அவன் நிச்சயமாக உங்களைத் தேடி வருவான் என கூறுகிறார் ஈஸ்வரி.
சர்வமும் அடங்கிப் போன குணசேகரன் இனிமேல் அவன் விருப்பப்படி நடந்து கொள்கிறேன். கல்யாணத்தை கூட நிப்பாட்டி விடுகிறேன் தர்ஷனை வர சொல்லுங்கள் என குறுகி நிற்கிறார். உடனே ஈஸ்வரி ஃபோனை எடுத்து அறிவுக்கரசி இடமும், கதிரிடமும் பேச சொல்கிறார்.
மறுக்கணமே குணசேகரன் கதிரை வீட்டிற்கு வர சொல்கிறார், அறிவு கரசியையும் இதிலிருந்து விலகுமாறு சத்தம் போடுகிறார். இனிமேல் கல்யாணம் கிடையாது என அவரை கழட்டி விட்டார். இப்படி தனது முதல் அடியை திருப்பிக் கொடுத்தார் ஈஸ்வரி. இப்பொழுது தான் எதிர்நீச்சல் சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது.