3BHK படத்துக்கு ஆடியன்ஸ் கொடுத்த ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

3BHK First Day Collection: ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் 3 BHK நேற்று வெளியானது. மிடில் கிளாஸ் குடும்பம் படும் கஷ்டத்தை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

சொந்த வீடு வாங்கும் கனவை சரத்குமார் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு நிறைவேற்றினார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். பல வருட இடைவெளிக்கு பிறகு சூரிய வம்சம் ஜோடியை திரையில் பார்த்த ரசிகர்களுக்கு எவர்கிரீன் நினைவுகள் தான்.

அதிலும் ஒரு குடும்பத் தலைவராக சரத்குமார் ரியல் லைஃப் அப்பாவை நினைவுபடுத்துகிறார். அதே போல் படம் முழுக்க வரும் காட்சிகள் சொந்த வாழ்வில் நடந்து கொண்டிருப்பதை கண்முன்னே காட்டுகிறது.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

ஏற்கனவே பத்திரிக்கையாளர் நிகழ்வில் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது. அதை தொடர்ந்து நேற்று படத்தை பார்த்த ஆடியன்ஸ் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மற்ற ஏரியாக்களை காட்டிலும் சென்னையில் படத்திற்கு அதிக ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் முதல் நாளிலேயே படம் ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

நேற்று பறந்து போ, பீனிக்ஸ் ஆகிய படங்கள் வெளியானது. அந்த போட்டியில் 3 BHK வலுவான அஸ்திவாரம் போட்டுள்ளது. இந்த வசூல் வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் என தெரிகிறது.

அதனால் திங்கட்கிழமை வெளியாகும் நிலவரத்தில் நிச்சயம் இப்படம் முன்னிலையில் இருக்கும் என சினிமா விமர்சனங்களும் பாராட்டியுள்ளனர்.