மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க, இப்பொழுது சூர்யாவை வைத்து கருப்பு என மூன்று படங்களில் டைரக்டர் அவதாரம் எடுத்த ஆர் ஜே பாலாஜி மீண்டும் நடிகனாக வலம் வர திட்டம் போட்டிருக்கிறார். சூர்யாவை வைத்து இப்பொழுது கருப்பு படத்தை எடுத்து வருகிறார்,
மூக்குத்தி அம்மன், சிங்கப்பூர் சலூன், எல்கேஜி போன்ற படங்கள் ஆர் ஜே பாலாஜிக்கு நடிகனாக அங்கீகாரத்தை கொடுத்தது. இப்பொழுது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் அடுத்து இவரை வைத்து ஒரு படம் தயாரிக்கவிருக்கிறார்கள்.
வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் பேமிலி 90 கோடிகள் வசூலித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை கொடுத்தது. லவ்வர், குட் நைட், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களை தயாரித்தது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ். இவர்கள் இப்பொழுது அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் இவர்கள் ஒன்ஸ்மோர் என்ற படத்தை தயாரித்துள்ளனர். அடுத்து ஆர் ஜே பாலாஜி நடிக்கவிருக்கும் ஹாப்பி என்டிங் என்ற ஒரு படத்தையும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளனர்.
டூரிஸ்ட் பேமிலி கொடுத்த அதிரிபூதிரி கலெக்ஷனால் இவர்கள் தொடர்ந்து பல படங்கள் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது சூர்யா நடித்து வரும் கருப்பு படத்தை இயக்கி வருகிறார் ஆர்.கே பாலாஜி, இந்த படம் முடிந்தவுடன் ஹேப்பி எண்டிங் படத்தில் நடிக்க போகிறார். இந்த படம் காமெடி கலந்த அடல்ட் மூவியாக இருக்கும் என்கிறார்கள்.