மகளா? மருமகளா? டி ஆர் பி-ஐ ஏத்த விஜய் டிவியின் புது சீரியல்

Vijay TV : விஜய் டிவி மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சியாக மாறிவிட்டது. காரணமே இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சீரியல்கள் தான்.

பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, மகாநதி, ஆஹா கல்யாணம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சின்ன மருமகள் என இப்படி அனைத்து சீரியல்களுமே விஜய் டிவியில் ஃபேமஸ் ஆகிவிட்டது.

உணர்ச்சி பூர்வமான சம்பவங்கள், குடும்ப பாசம், நம்ம ஊரு கலாசாரம், அசல் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சீரியல்களே விஜய் டிவியின் உண்மையான வெற்றிக்குக் காரணம்.

TRP ரேட்டிங்கில் விஜய் டிவி வாரம் தோறும் முதலிடத்தை பிடிக்கிறது. ஒரு சீரியல் முடிவுக்கு வந்தால் மீண்டும் இன்னொரு சீரியல் அடுத்த நாளே களமிறங்குகிறது.

மருமகள் மகளாக மாறும் கதை..

தற்போது ஒரு புதிய சீரியல் விஜய் டிவியில் உதயமாக உள்ளது. தன் மகனை இழந்த தாய் மகனை நினைத்து பார்த்து தவிக்கும் நொடி, தன் மருமகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தாங்கும் காட்சி, என் மருமகளை நான் இங்கே அனுப்ப மாட்டேன் எனக் கூறும் ஒரு பாச போராட்டம் இப்படி தான் அந்த சீரியலின் ப்ரமோ முடிகிறது.

மகளே என் மருமகளே” சீரியல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. ப்ரமோவை பார்த்தாலே நிச்சயம் சீரியல் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.