நடிப்பில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யாவை மிஞ்சிட்டார் bb டைட்டில் வின்னர்.. திகட்டிய பன் பட்டர் ஜாம்

Cinema : சினிமா தான் இன்றைய உலகில் அனைவரையும் ஆட்டிபடைக்கும் ஒரு கருவியாக இருக்கிறது.

ரஜினி, கமல், விஜய், அஜித், நயன்தாரா, திரிஷா, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி என இந்த ஹீரோக்கள் தான் இப்போது டாப் லிஸ்டில் சினிமா துறையில் இருக்கின்றனர்.

எந்த கதையாக இருந்தாலும் அதுக்கு பொருத்தமாக நடித்துக் கொடுத்தால் மட்டுமே இந்த சினி துறையில் நிலைத்திருக்க முடியும். அதுவும் இப்போது ஹீரோக்கள் மட்டுமே நிலையாக இருக்கின்றனர். ஹீரோயின்கள் எங்கே போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு புதுமுகம் வர வர பழைய நடிகைகள் காணாமல் போய்விடுகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் கங்குவா படம் திரைக்கு வருவதற்கு முன்பே சூர்யா ரசிகர்கள் மிக ஆராவாரம் போட்டனர். ஆனால் படம் வெளியாகி மிகப் பெரும் தோல்வியை கொடுத்தது.

இதே போல் விக்ரமின் தங்கலான் திரைப்படமும், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தான் திரையில் ரிலீஸானது. பா ரஞ்சித்தின் மேல் மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்து தியேட்டருக்கு சென்றனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யாமல் படம் தோல்வியில் முடிந்தது.

பேசிப்பேசியே காலவாராதிங்க..

பிக் பாஸ் போட்டியாளர் ராஜூ, நடித்துள்ள ” பன் பட்டர் ஜாம்” படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. “தனுஷ் எஸ் ஜே சூர்யா போன்ற நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவரது நடிப்பு இருக்கிறது என சோனி இளமாறன் கூறியுள்ளார்“.

இதைத்தொடர்ந்து “10 வருடத்தில் யாருமே இந்த மாதிரி நடித்ததில்லை என இயக்குனர் கோகுல்” கூறியுள்ளார். இதைச் சுட்டிக்காட்டி ப்ளூ சட்டை மாறன் கூறியது : படம் பாக்குறது விட இவங்க பண்ற பில்டப் தான் ரொம்ப அதிகமா இருக்குனு பதிவிட்டுருக்கிறார்.