மணிரத்னத்தை கைவிட்ட ரஜினி.. எதிர்பாராத கூட்டணியில் தலைவர் 173

Rajini : லோகேஷின் கூலி படத்தில் இப்போது ரஜினி நடித்து முடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த சூழலில் அடுத்ததாக ரஜினியின் படத்தை மணிரத்னம் இயக்குவதாக கூறப்பட்டது. கமல், மணிரத்னம் கூட்டணி நிலையில் தக் லைஃப் படம் வெளியானது. ஆனால் இந்த படம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

இதனால் ரஜினி, மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தலைவர் 173 படத்தை விவேக் ஆத்ரேயா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஆன்டேசுந்தரனிகி மற்றும் சாரிபோதசானிவரம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

ரஜினியின் 173 வது பட அப்டேட்

மேலும் ரஜினி மற்றும் விவேக் கூட்டணியில் உருவாகும் படம் மும்பை கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. ஆகையால் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ரஜினி ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ஓய்வெடுக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது எதிர்பார்க்காத கூட்டணி அமைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விஜய் அரசியலில் செம பிஸியாக இருந்து வருகிறார்.

அவரது கடைசி படமாக ஜனநாயகன் படம் உள்ளது. அதேபோல் அஜித்தும் வருடத்திற்கு ஒரு படம் தான் நடித்து வருகிறார். ஆனால் இந்த வயதிலும் ரஜினி அடுத்தடுத்த படங்களை புக் செய்து நடித்து வருகிறார். ஜெயிலர், வேட்டையன் போல் கூலி படம் ஹிட் அடிக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.