தேரை இழுத்து தெருவில் விட்ட யூடியூப் சேனல்.. நடிகை அருணாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி

Actress Aruna: வேலியில் போற ஓணானை தூக்கி வீட்டிற்குள் விட்ட கதையாகிவிட்டது 90ஸ் ஹீரோயின் ஒருவருக்கு. யூடியூப் சேனல்கள் நிறைய வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்றுதான் 90களில் நடிகை ஹீரோயின்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என மக்களிடம் காட்டுவது.

அப்படி பிரபல சேனல் ஒன்று கல்லுக்குள் ஈரம் பட ஹீரோயின் அருணாவை கண்டுபிடித்தது. இவரை நன்றாக அடையாளம் காட்டியது சிறு பொன்மணி அசையும் பாடல் தான். செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அருணாவை ஹோம் டூர் என சொல்லி வீட்டை சுற்றி காட்டி வீடியோ போட்டது அந்த சேனல்.

ஹோம் டூர் போடுறவங்க இனி உஷார்

அருணாவின் வீடு பங்களா என்பதை தாண்டி பல மடங்கு மதிப்புள்ள அரண்மனை என்றே சொல்லலாம்.


ஒவ்வொரு அறையும் ஒரு வீட்டிற்கு சமம். வீட்டிற்குள்ளேயே தியேட்டர் வேற. இவருடைய வீடு இந்த அளவுக்கு வேலைப்பாட்டுடன் இருப்பதற்கு காரணம் அவருடைய கணவர் இன்டீரியர் டிசைனர் என்பதால் தான்.

Aruna house
Aruna house

அருணா இவ்வளவு வசதியானவரா, இவரை திரைப்படங்கள் முழுக்க ஏழை வீட்டு பெண்ணாகவே காட்டி விட்டார்களே என தமிழ் சினிமா ரசிகர்கள் கொதித்தெழுந்து போய்விட்டார்கள்.

அருணாவின் ஹோம் டூர் சமீபத்தில் யூடியூப்பில் ட்ரெண்டாக, இப்போது அமலாக்கத்துறை அவருடைய வீட்டில் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. தங்களால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்து முடித்திருக்கிறது அந்த யூடியூப் சேனல்.