Vijay : விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சார்பாக நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். அந்த வகையில் அவர் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே செல்கிறார்.
தன் கட்சி வேலைகளை கால நேரம் பார்க்காமல் ஓய்வின்றி தன் கட்சி கட்டமைப்புகளை சரியான முறையில் செய்து கொண்டிருக்கிறார் மற்றும் தன் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் பிஸியாக இருக்கிறார்.

அவ்வளவு எளிதில் ஒரு அரசியலை நடத்தி விட முடியுமா என்று எதிர்கட்சிகள் கேட்கும் அளவிற்கு அனைவரும் விஜய் அவர்களின் மீது பொறாமை கொண்டாலும், ஏற்கனவே அரசியலில் கை தேர்ந்த நபர் போல நடந்து கொள்கிறார் விஜய்.
பொதுவாக பாரம்பரிய வரலாற்றிலேயே மண், பெண் என்ற வகையில் தான் போட்டியே பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் யார் ஆட்சியை பிடிக்கிறார் என்று போட்டி நடந்து கொண்டிருக்கும் போது எதிரணியில் நிற்பவர்களை அழிப்பதற்காக சதிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன.
அரசியல் காழ்புணர்ச்சியால் விஜய்யை அசிங்கப்படுத்தும் IT Wing..
அதுபோல விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தவுடன் விஜய் பற்றி சில எதிர்மறையான கருத்துக்களும் எழுந்தன. அதில் விஜய் தற்போது தனது மனைவி சங்கீதாவுடன் இல்லை என்றும் த்ரிஷாவுடன் சில காலம் சுற்றி திரிவதாகவும் செய்திகள் எழுந்து வருகின்றன மற்றும் சில புகைப்படங்களும் பரவி வருகின்றன.
அந்த வகையில் தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருந்துள்ளனர் அதை திருத்தி அமைத்து விஜயின் மனைவி சங்கீதா இருந்த இடத்தில் திரிஷாவின் முகத்தை பொறுத்தியுள்ளார்கள். இது தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அரசியல்வாதியான விஜய் அவர்களை இழிவு படுத்துவதற்காக இப்படிப்பட்ட செயல்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி. இதை பார்த்தவுடன் இது மாதிரியான சில வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது நமக்கு தெரிய வருகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது இருக்கும் காலகட்டங்களில் இதெல்லாம் சாதாரண என்பது நாம் அறிந்த ஒன்றே.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சேதப்படுத்துவதன் மூலம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் சேதப்படுத்துதல் என்பதன் நோக்கமா இது என்ற கேள்வி எழுகிறது.