வசமான பொறியில் மாட்டிக்கொண்ட நயன் விக்னேஷ் சிவன்.. கல்யாண வாழ்க்கைக்கு வந்த உச்சகட்ட டிப்ரஷன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோயில், குளம் என சுற்றி வருகிறார்கள். பழனி, திருப்பதி என எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் போய் வருகிறார்கள். அவர்கள் கூடவே உயரமான கருப்பாய் ஒரு மனிதரும் செல்கிறார். எங்கே சென்றாலும் அவர்களது நிழல் போல் நிற்கிறார்.

நயன்தாரா ஜோதிடத்தை மிகவும் நம்பக்கூடியவர். அவர்கள் கூடவே செல்வது ஜோசியக்காரர் தான். அந்த ஜோதிடர் இளையராஜா, பெரிய அரசியல்வாதிகள் போன்றவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது புகைப்படங்களும் வெளிவந்துள்ளது. அவர் பிடியில் தான் இப்பொழுது நயன்தாராவும் இருக்கிறார்.

அஜித்துக்கு விபத்து ஏற்படும், நயன்தாரா பல வழக்குகளை சந்திப்பார் என இந்த ஜோதிடர் முன்பு கணித்த பல விஷயங்களை முன் வைக்கிறார்கள். இப்படி அவர் ஜோதிடம் பார்த்து சொல்வதை தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பின்பற்றி வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க தெலுங்கு பக்கம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விரைவில் விவாகரத்து என செய்தி வந்துள்ளது. இதற்குக் காரணம் நயன்தாரா தான். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், குறைவான அறிவுடைய ஒருவரை திருமணம் செய்தால் மாட்டிக் கொள்வோம். அவர்கள் செய்த தப்புக்கு நாம் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நயன்தாரா குறிப்பிட்டதில் இருந்து விக்னேஷ் சிவன் அவரை பயன்படுத்திக் கொள்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தனுஷ் பிரச்சனையில் கூட பின் இருந்து செயல்பட்டது அவராகத்தான் இருக்கும். இப்படி பல கஷ்டங்களை நயன்தாராக்கு கொடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் இந்த ஜோடி விரைவில் பிரியக்கூடும் என அச்சம் நிலவி வருகிறது.