சிம்புவுக்கு NOC, விஜய்க்கு 4 கோடி செட்.. தனுஷ் மீது கொல காண்டில் பப்ளிசிட்டி அக்கா

Dhanush: தனுஷ் மீது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கிறது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருந்தாலும் கூட அவரை சோசியல் மீடியாவில் கலாய்க்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது.

அவர்களுக்கெல்லாம் குபேரா இசை வெளியீட்டு விழாவில் அவர் பதிலடி கொடுத்திருந்தார். அதையே கூட மீம்ஸ் போட்டு இணையதளத்தில் கலாய்த்தனர். அதேபோல் வெற்றிமாறன் சிம்பு பட விவகாரத்திலும் இவர் தலை உருட்டப்பட்டது.

பணத்தாசை பிடித்தவர் 20 கோடி பணம் கேட்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால் அது உண்மை கிடையாது. ஒரு ரூபாய் கூட தனுஷ் காசு வாங்கவில்லை என வெற்றிமாறன் விளக்கம் தந்தார்.

அதன் பிறகு தான் தெரிந்தது இது வேண்டும் என்று சிலர் பரப்பிய வதந்தி என. அதில் நயன்தாரா மீது தான் அனைவரையும் பார்வையும் சென்றது. தனுஷ் மீது அவருக்கு இருக்கும் கோபம் வெறுப்பு பகை அனைத்துமே ஊர் அறிந்தது தான்.

தனுஷ் மீது கொல காண்டில் பப்ளிசிட்டி அக்கா

அதனால் சிம்பு விஷயத்தை ஊதி பெரிசாக்க பார்த்தார். ஆனால் உண்மை தெரிந்த பிறகு நயன்தாராவுக்கு தான் நோஸ்கட் ஆனது. ஏனென்றால் இவரிடம் வெறும் 4 செகண்ட் காட்சிக்காக 10 கோடி கேட்ட தனுஷ் கேஸ் போட்டார்.

ஆனா அங்க ஒரு படமே எடுக்க போறாங்க. அவங்க கிட்ட ஒரு பைசா கூட வாங்கல. இதுவே நயன்தாராவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும். அதை அதிகமாக்குவது போல் தற்போது தனுஷ் இன்னொரு விஷயத்தையும் செய்திருக்கிறார்.

என்னவென்றால் தனுஷின் குபேரா படத்திற்கு போடப்பட்ட 4.5 கோடி மதிப்புள்ள செட் இப்போது ஜனநாயகன் பட பாடல் ஷூட் செய்வதற்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் இப்போது லேட்டஸ்ட் ட்ரெண்டிங் நியூஸ்.

இதை தனுஷ் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் மீண்டும் நயன்தாராவை இன்சல்ட் செய்த தனுஷ் என கலாய்க்கவும் தொடங்கி விட்டனர். தேவையில்லாமல் பப்ளிசிட்டிக்காக ஒரு விஷயத்தை செய்ய போய் மூக்குத்தி அம்மன் இப்போது படாத பாடுகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க குபேரா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இல்லையே அப்புறம் எதற்கு இவ்வளவு அலப்பறை என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சந்தில் சிந்து பாடுகின்றனர். ஆனால் தனுஷ் பேசியதால் தான் இது நடந்தது என ஒரு பக்கம் பதிலடியும் தொடர்கிறது.