Ajith : அஜித் குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி போட இருக்கிறார். இந்த படத்தை ஆரம்பத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களினால் இந்நிறுவனம் பின்வாங்கி விட்டது. இதைத்தொடர்ந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரோமியோ பிச்சர்ஸின் நிறுவனர் ராகுல் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் அஜித்தின் சம்பளம் 180 கோடி என்றும் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.
இதற்கு காரணம் அஜித் இப்போது இந்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம். அதாவது நவம்பர் மாதம் தான் ஏகே 64 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்போது அஜித் துபாயில் கார் ரேசில் தீவிரம் காட்டி வருகிறார்.
தாமதமாகி கொண்டிருக்கும் ஏகே64 படத்தின் அறிவிப்பு
அதனால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறி இருக்கிறாராம். ஆனால் அஜித் ரசிகர்களோ எப்போது ஏகே 64 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அஜித்தோ இவ்வாறு இழுத்து அடித்து வருவது அவரது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. இப்போதுதான் அஜித் ஃபுல் ஃபார்ம்க்கு வந்த தொடர்ந்து ரசிகர்களின் கவனம் பெற்று வந்தார். விடாமுயற்சி தோல்வி அடைந்தாலும் அதன் பிறகு குட் பேட் அக்லி வெற்றியை கொடுத்தது.
கார் ரேசிலும் வெற்றி பெற்று பரிசு வென்று இருந்தார். மேலும் உயரிய விருதான பத்மபூஷன் விருதும் கொடுக்கப்பட்டது. இப்படி இருக்கும் சூழலில் அடுத்த பட அப்டேட்டை சீக்கிரமாக வெளியிடுவார் என்று எதிர்பார்த்தால் இப்படி இழுத்தடிக்கிறாரே என யோசிக்க வைக்கிறது.