அண்ணன அடிச்சு கொன்னுட்டோம்.. சாரிப்பா இந்தா தண்ணி இல்லாத காட்டுல பட்டா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரணத்தில் விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதே போல் அரசு தரப்பில் இருந்து இறந்து போனவரின் குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டாவும் அரசு வேலையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தண்ணீர் இல்லாத காட்டில் பட்டா கொடுத்திருக்காங்க. 80 கிலோமீட்டர் தாண்டி வேலை கொடுத்து இருக்காங்க. எப்படி என்னால் போக முடியும் என அஜித்குமாரின் சகோதரர் மீடியாவிடம் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

அதேபோல் அவங்க கொடுத்தாங்க நான் வாங்கி வச்சிருக்கேன். ஆனா அண்ணன் சாவுக்கு நீதி வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவர் வேலை ரொம்ப தூரத்துல கொடுத்திருக்காங்க அப்படின்னு சொன்னதை ஆளும் கட்சி தரப்பில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கட்சியின் ஆதரவாளர்கள் உங்க வீட்டு வாசல்லயே கவர்மெண்ட் ஆபீஸ் கட்டி வேலை கொடுப்பாங்களா என திட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மற்ற கட்சியினர் பதிலடி கொடுக்கின்றனர்.

அவங்க வீட்ல ஒரு உயிர் போய் இருக்கு. அத பத்தி யாரும் பேசல எதார்த்தமா சொன்னத பெருசா பேசி பிரச்சனைய பெருசாக்குறிங்க என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

அதேபோல் அண்ணன அடிச்சு கொன்னுட்டோம் சாரிப்பா இந்தா 80 கிலோமீட்டர் அப்பால வேலையும் தண்ணி இல்லாத காட்டுல வீட்டு மனை பட்டாவும். இப்படியாக மீம்ஸ் ஒரு பக்கம் பரவி வருகிறது.

இப்படி அரசியல் சண்டை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அப்படி சோசியல் மீடியாவில் பரவி வரும் சில அரசியல் மீம்ஸ் இதோ.