Ajith Kumar : சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பகுதியில் அஜித்குமார் கோவில் காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது, அனைவரையும் கேள்விக்கு உள்ளாகியது.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் உடலில் 40-இல் இருந்து 50 இடங்களில் காயங்கள் இருந்தன. மூளையில் ரத்த விடை, சிகரெட் கரிச்சல்கள் மருத்துவ ரிப்போர்ட்டில் வெளிவந்தது.
தொடக்கத்தில் உயிரிழப்பாக கருதப்பட்ட அஜித் குமாரின் சாவு பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டது. சட்டப்பிரிவு 196(2)(a) கீழ்ப்படி ஐந்து போலீசார்கள் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் முக ஸ்டாலின் ஒத்துழைப்பு படி இந்த வழக்கு சிபிஐ -க்கு மாற்றப்பட்டது. சிபிஐயின் வழக்கு விசாரணை முடிவு ஆகஸ்ட் 20க்குள் வெளியிடப்படுவதாக கூறியுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்கும் தவெக தலைவர்..
இதனையடுத்து இறந்து போன அஜித்குமாரின் குடும்பத்தை சந்தித்து, ஆறுதல் கூறினார் தவெக கட்சியின் தலைவர் விஜய். அஜித் குமாரின் வழக்கில் சிறப்புக் புலனாய்வு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற 24 மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை கோரி வரும் ஜூலை-13 போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தில் தவெக கட்சித் தலைவர் விஜயும் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது .