போட்டி போட்டு வரும் 2 புது சீரியல்.. விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய கதாநாயகி

Serial: சீரியல் என்றாலே மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு பொழுதுபோக்கான நிகழ்ச்சியாக இருக்கிறது. அதனால் சின்ன திரையில் உள்ள சேனல்கள் அனைத்துமே சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புதுப்புது சீரியல்களை அடுத்தடுத்து கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அப்படித்தான் தற்போது போட்டி போட்டு இரண்டு புது சீரியல்கள் வருவதற்கு தயாராகி இருக்கிறது.

அந்த வகையில் சன் டிவி விஜய் டிவி, நீயா நானா என்று மோதிக் கொண்டு வருகிறது. இதில் விஜய் டிவியில் இருந்து முதல் முறையாக சன் டிவி சீரியலுக்கு ஒரு கதாநாயகி அடி எடுத்து வைக்கிறார். அதாவது பூவே பூச்சூடவா, அபி டெய்லர், நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிழக்கு வாசல் போன்ற சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் இதுவரை ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி சீரியலில் கலக்கி வந்தார்.

ஆனால் இவர் நடித்த எல்லா சீரியலுமே பாதியிலேயே முடிந்து போகும் அளவிற்கு தான் ரேஷ்மாவின் நிலைமை பரிதாபமாக இருந்தது. அதனால் இந்த முறை விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியலுக்கு குட் பாய் சொல்லிவிட்டு சன் டிவி சீரியலான புத்தம் புது சீரியல் மூலம் நுழையப் போகிறார். இவருக்கு ஜோடியாக சுந்தரி சீரியலில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து வந்த ஜிஷ்ணு மேனன் கமிட்டாகி இருக்கிறார்.

அடுத்ததாக விஜய் டிவியில் வரும் புது சீரியல் ரீமேக் சீரியல் ஆக வரப்போகிறது. அதாவது மகளை என் மருமகளே என்ற சீரியல் மூலம் மறுபடியும் வர்ஷினி கதாநாயகியாக வருகிறார். இவர் நடித்த நீ நான் காதல் என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவரை தொடர்ந்து ரேஷ்மா பசுபதி, நவீன் மற்றும் அவினாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கிறார்கள். தற்போது இந்த இரண்டு சீரியலும் புத்தம் புதியதாக வருவதற்கு தயாராக இருக்கிறது.