கல்யாணத்துக்கு முன் தெரிந்த உண்மை.. முதல் மனைவி குறித்து வெளிப்படையாக பேசிய விஷ்ணு விஷால்

Vishnu Vishal :நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவி ரஜினியை பற்றி பேசி இருந்தார். தயாரிப்பாளர் மகளான ரஜினியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டது. 

இதன் காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை  பிறந்துள்ளது. பாலிவுட் நடிகர் அமீர்கான் மீரா என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டி இருந்தார்.

இந்த சூழலில் தன்னுடைய முதல் மனைவி பற்றியும், அவரை பிரிந்ததற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார் விஷ்ணு விஷால். அதாவது கல்யாணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ரஜினிக்கு கேன்சர் இருக்கும் விஷயம் தெரிந்ததாம். 

முதல் மனைவியை பிரிந்த காரணத்தை கூறிய விஷ்ணு விஷால்

அப்போது கடைசி வரை உன்னை கைவிடமாட்டேன் என்ற விஷ்ணு விஷால் சத்தியம் செய்தாராம். மேலும் கல்யாணமாகி ஆறு ஆண்டுகள் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் ஆறு வருடம் கழித்து தான் இவர்களுக்கு குழந்தையும் பிறந்ததாம். 

அந்தச் சமயத்தில் படங்களில் பிசியானதால் தன்னை கவனித்துக் கொள்ளவில்லை என விஷ்ணு விஷால் இடம் அவரது மனைவி கோபித்துக் கொண்டாராம். இதுவே மனகசப்பாகி இருவரும் பிரிந்து விட்டனர். ராட்சசன் படம் வெளியான போது எல்லோரும் மகிழ்ச்சியில் இருந்தனர். 

ஆனால் அப்போதுதான் எனக்கு விவாகரத்து ஆனது. அதை நினைத்து நான் கண்கலங்கி கொண்டிருந்தேன். இப்போதும் ரஜினியுடன் நான் பேசி வருவதாகவும் விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார். அதன் பிறகு ஜுவாலா குட்டா உடன் காதல் ஏற்பட்டபோது கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம் என்றுதான் நினைத்தாராம். 

ஆனால் அவரது மனைவிக்கு கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததால் திருமணம் செய்து கொண்டேன். குழந்தை பிறக்காத நிலையில் அமீர்கான் தான் எங்களுக்கு உதவி செய்தார். அவருக்கு தெரிந்த மருத்துவர் மூலம் ஜுவாலாவுக்கு சிகிச்சை அளிக்க இப்போது குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கு நன்றி கடனாகத்தான் அமீர்கானை பெயர் வைக்க சொன்னதாக விஷ்ணு விஷால் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.