இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 5 படங்கள்.. கல்லா கட்டுவாரா வனிதாவின் மகள்

This Week Theatre Release Movies : கடந்த வாரம் சித்தார்த்தின் 3BHK, சிவாவின் பறந்து போ, கீர்த்தி பாண்டியனின் அக்கேனா ஆகிய படங்கள் வெளியானது. இந்த வாரம் தியேட்டரில் 5 படங்கள் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பில் உருவான பிரீடம் படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது. இலங்கை அகதிகள் மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக சசிகுமார் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து வரவேற்பு பெரும் நிலையில் இந்த படமும் ஹட்ரிக் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக தேசிங்கு ராஜா படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. விமல் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் விஜய் டிவி புகழும் காமெடி கதாபாத்திரத்தை நடித்திருக்கிறார்.

ஜூலை இரண்டாவது வாரம் தியேட்டரில் வெளியாகும் 5 படங்கள்

இதைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது மிஸஸ் ஆண்ட் மிஸ்டர் படம். இந்த படத்தை வனிதா விஜயகுமாரை இயக்கியுள்ள நிலையில் அவரது மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார்.

மேலும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவருடைய தம்பி ருத்ரா நடிப்பில் உருவாகி இருக்கிறது ஓஹோ எந்தன் பேபி. இந்த படமும் ஜூலை 14ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. மேலும் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் நடிப்பில் உருவாகி இருக்கிறது மாயக்கூத்து.

ஏ ஆர் ரகுவேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சமூகப் படைப்பாளியின் பொறுப்புணர்வை வெளிக்காட்டும்படி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இந்த வாரம் எந்த படங்கள் வசூல் வேட்டையில் இறங்குகிறது என்பதை பொறுத்திருந்து இருந்து பார்க்கலாம்.