Atlee: உள்ளூர் ஆட்டக்காரனுக்கு எப்பவும் சொந்த ஊர்ல மரியாதை இருக்காதுன்னு சொல்லுவாங்க அப்படித்தான் அட்லீயின் நிலைமையும் போல.
தமிழ் ரசிகர்கள் முழுக்க இவரை காபி கேட் இயக்குனர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வியந்து பார்க்கும் அளவுக்கு சம்பவம் பண்ண இருக்கிறார் அட்லீ. இவருடைய இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பது உறுதியாகிவிட்டது.
இதை தொடர்ந்து படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது. தற்போது இந்த படத்திற்காக அட்லீ மொத்தம் ஐந்து டாப் ஹீரோயின்களை லாக் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதில் தீபிகா படுகோனுக்கு முக்கிய கேரக்டராம்.
ஹாலிவுட் பிரபலம் வில்லனா?
அவரை தவிர ஜான்விகபூர், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். அட்லீ இந்த படத்தை ஜவான் படத்தை விட சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார்.
இப்போதெல்லாம் ஒரு படம் பெரிய வெற்றி பெறுவதற்கு ஹீரோ மட்டுமில்லை வித்தியாசமான வில்லனும் தேவைப்படுகிறார். அதனால் தான் ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடும் ஹாலிவுட் நடிகர் ஒருவரை களம் இறக்க இருக்கிறார்.
ஆஸ்கார் நாயகன் வில் ஸ்மித் தான் அந்த நடிகர். இதில் என்ன விஷயம் என்றால் வில் ஸ்மித் 300 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க கூடியவர். அவரை இங்கு கொண்டு வர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 250 கோடியாவது சம்பளம் கொடுக்கப்படும் என்கிறார்கள்.
மேலும் இந்த முறை அட்லீ அனிருத்தை கழட்டி விட்டுவிட்டு சாய் அபயங்கரை இசையமைப்பாளராக லாக் பண்ணி இருக்கிறார். மேலும் படத்தின் பட்ஜெட் மட்டும் 800 கோடி என சொல்லப்படுகிறது.