Simbu : நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகளுக்கு இப்போது பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள நடிகைகள் தான் நடித்து வருகிறார்கள்.
அவ்வாறு தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரவு அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் கயாடு லோஹர். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கயாடு லோஹர் அதர்வாவின் இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சிம்புவின் 49வது படம் மற்றும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்திலும் இவர் தான் கதாநாயகி என்று கூறப்பட்டது.
சிம்பு மற்றும் தனுஷ் படத்தை தவறவிட்ட நடிகை
இந்த சூழலில் சிம்பு படத்தில் இவர் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியான நிலையில் இப்போது தனுஷ் பட வாய்ப்பு பறிபோய் உள்ளது. அந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மமிதா பைஜு தான் நடிக்க இருக்கிறாராம்.
இவ்வாறு சிம்பு மற்றும் தனுஷ் பட வாய்ப்பு கை நழுவி போய்விட்டதால் கயாடு மிகுந்த கவலையில் இருக்கிறாராம். ஏனென்றால் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியிருந்தார். அதில் கயாடுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.
அந்த தயாரிப்பாளர் படத்தில் நடித்ததால் இவ்வாறு சொல்லலாமா என்ற விமர்சனங்களும் எழுந்தது. ஆனாலும் இப்போது கயாடுக்கு பட வாய்ப்புகள் பறி போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.