Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மண்டபத்தில் சீதா இல்லை என்று அருண் கோபப்பட ஆரம்பித்து விட்டார். சீதா கழுத்தில் ஏற்கனவே நான் தாலி கட்டிருக்கிறேன். அந்த வகையில் அவள் என்னுடைய பொண்டாட்டி, அப்படி இருக்கும் பொழுது என்னிடம் சொல்லாமல் எப்படி மண்டபத்தை விட்டு வெளியே போகலாம் என்று அருண் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
உடனே சீதாவின் அம்மா, ஒரு வாரத்துக்கு முன்னாடி தாலி கட்டின உங்களுக்கு இப்படி இருக்கிறது என்றால் ஒரு வருஷமாக என்னுடைய மாப்பிள்ளை கூட என் பொண்ணு குடும்பம் நடத்திருக்கிறாள். அப்படிப்பட்ட புருஷன் இடம் உண்மையை சொல்லாமல் மறைத்ததற்கு என் மாப்பிள்ளை கோபப்படதான செய்வாங்க என்று கேள்வி கேட்டு அருணுக்கு புரிய வைத்தார்.
ஆனாலும் அருண் கூட வேலை பார்க்கும் போலீஸ் அனைவரும் வந்து நின்ற நிலையில் அருண், சீதா இல்லாமல் இருப்பது அவமானமாக நினைக்கிறார். அதனால் மண்டபத்தை விட்டு வெளியே போகலாம் என்று முடிவு பண்ணும் பொழுது முத்துவின் அப்பா, எதனாலும் அவசரமாக முடிவெடுப்பது தான் உங்களுடைய வயசு. கொஞ்சமாவது பெற்றோர்களை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா, நீங்க பேசாமல் போய்விடலாம் என்று முடிவு எடுக்கிறீர்கள்.
ஆனால் சீதாவின் அம்மா என்ன வருத்தத்தில் இருக்கிறார் என்று யோசித்துக் கூட பார்க்க மாட்டீங்க. அன்னைக்கு அவசரப்படாமல் கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தால் இன்னைக்கு இந்த பிரச்சனையை வந்து இருக்காது என்று சொல்லி சமாதானப்படுத்தி விட்டார். ஆனாலும் இந்த கல்யாணம் நடக்காது என்று விஜயா மனோஜ் ஒரு பக்கம் பேச ஆரம்பித்து விட்டார்கள். பிறகு சுருதி, மீனா முத்துவை சமாதானப்படுத்தி நிச்சயம் கூட்டிட்டு வருவாங்க பொறுமையாக இருக்கலாம் என்று சொல்கிறார்.
அதன்படி மீனா சீதா முத்து அனைவரும் மண்டபத்துக்கு வந்து விட்டார்கள். ஆனால் முத்து குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் இருப்பதால் செல்வம் முத்துவை பிடித்துக் கொண்டே வருகிறார். பிறகு அண்ணாமலை, இப்பொழுது எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லி சீதா மற்றும் அருண் கல்யாணத்தை முடித்து வைத்து விடுகிறார்கள். பிறகு கல்யாணம் முடிந்த கையுடன் அண்ணாமலை சுருதி ரவி விஜயா ரோகிணி மனோஜ் அனைவரும் வீட்டிற்கு போய் விடுகிறார்கள்.
முத்துவும் கிளம்பும்போது மீனாவை பார்த்து என்னால யார் வாழ்க்கையும் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் சீதாவின் இரண்டாவது கல்யாணத்திற்கு வந்தேன். மற்றபடி இனி எனக்கும் உங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீயும் என் வீட்டு பக்கம் வந்து விடாதே என்று சொல்லி மீனாவை விட்டு போவதற்கு முத்து முடிவெடுத்து விட்டார். சீதாவின் கல்யாணத்தால் மீனாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.