Vishnu vishal : விஷ்ணு விஷால் ஒரு காலத்தில் ப்ரொபஷனல் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார். தமிழக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கால் வலிக்கு விழுந்த விஷ்ணு விஷாலுக்கு கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியது.
2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் எதிர்பாராத அளவு வெற்றியை கொடுத்தது. வசூலில் பயங்கரமான விளைச்சலை பார்த்தது.
இதைத் தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற திரைப்படங்களில் தனது திறமையால்,பயங்கரமான வெற்றியை குவித்து தமிழ்நாட்டு மக்களின் மனதில் மேலும் இன்னொரு படி உயர்ந்தார் விஷ்ணு.
ஒரு கதையை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பார் விஷ்ணு விஷால் ஒரு கமர்சியல் ஹீரோவாக இல்லாமல், கதையை மையமாக வைத்து திரையில் தனது நடிப்பை ஒரிஜினலாக வெளிப்படுத்தபவர்.
விஷ்ணு விஷாலின் வரிசை படங்கள்..
விஷ்ணு விஷால் தனது பட வரிசை குறித்து பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் தனுஷுக்கு டஃப் கொடுப்பார் போல என கூறி வருகிறார்கள்.
‘Oh enthan baby‘ இது என் தம்பியின் தயாரிப்பு திரைப்படம், இதைத்தொடர்ந்து ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் “இரண்டு வானம்” திரைப்படம் நடிக்க இருக்கிறேன். இதைத்தொடர்ந்து “ஆர்யான்”, இதன் வரிசையில் ராட்சசன் பாகம் 2 படமும் திட்டமிடப்பட்டுள்ளது.