Dhanush-Idlykadai: குபேரா படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் அடுத்ததாக இட்லி கடை வெளியாக இருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார் தனுஷ். இப்படி கவனிக்க தகுந்த பல விஷயங்கள் இருப்பதாலேயே எதிர்பார்க்கப்படும் படமாகவும் உள்ளது.

அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் தற்போது ஆஃப்லைன் ப்ரோமோஷன் ஜோராக நடந்து வருகிறது. இதை செய்வது தனுஷ் மேல் உயிரையே வைத்திருக்கும் அவருடைய ரசிகர்கள் தான்.
சூடு பிடிக்கும் இட்லி கடை யாவாரம்
அப்படி என்ன பிரமோஷன் என்று பார்த்தால் ரோடுகளில் தென்படும் இட்லி கடைகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் இப்போது மக்கள் அதிகம் விரும்புவது இது போன்ற தள்ளுவண்டி கடைகளை தான்.
பெரிய ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டாலும் கிடைக்காத சுவை தள்ளுவண்டி கடை இட்லி சாம்பாரில் கிடைக்கும். அதேபோல் நடுத்தர வர்க்கம், பேச்சுலர்ஸ் என எல்லோருக்கும் சீப் அண்ட் பெஸ்ட் கடைகளும் இதுதான்.
காலை நேரங்களில் இங்கு கூட்டம் அலைமோதும். அதனாலயே இப்படிப்பட்ட இடங்களை பார்த்து போஸ்டரை ஒட்டி ரசிகர்கள் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். உண்மையிலேயே இது நல்ல ஐடியா.
படத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு கூட இதன் மூலம் தெரிந்து விடும். அதனால் தியேட்டருக்கு ஆடியன்ஸ் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என சோசியல் மீடியாவில் பாராட்டுக்களும் குவிகிறது.
சென்னையில் பல பகுதிகளில் இந்த பிரமோஷன் வேலைகள் பயங்கரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் தமிழகம் முழுவதிலும் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் தங்கள் ஏரியாக்களில் ப்ரோமோஷன் செய்யும் வேலையை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.