மகளை நினைத்து பீல் பண்ணும் பாக்யா.. விவாகரத்தில் கண்டிஷன் போட்ட இனியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், நித்தீஷ் சுதாகர் மூலம் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று கோபி குடும்பத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது இனியா சொன்னது என்னவென்றால் சட்டப்படி நான் அவருடைய மனைவியாக இருக்கும் வரை என்னை தொந்தரவு பண்ணிக் கொண்டே தான் இருப்பார்.

நித்திஷ் கேரக்டர் பற்றி எனக்கு தெரியும், எது பண்ண கூடாது என்று சொல்கிறோமோ அதை தான் செய்வார். அதனால் என்னிடம் பேச வேண்டாம் என்று யார் சொன்னாலும் அதை கேட்காமல் தொடர்ந்து என்னை தொந்தரவு செய்து கொண்டே தான் இருப்பார். இதற்கு ஒரு வழி நான் விவாகரத்து வாங்கினால் தான் முடியும் என்று சொல்கிறார்.

உடனே இது விஷயமாக செழியன், பாக்கியா, கோபி, இனியா, லாயரை பார்த்து பேசுகிறார்கள். லாயரும் அவருடைய பழைய விஷயங்கள் எல்லாம் எஃப் ஐ ஆர் போட்டு இருப்பதால் ஈசியாக அதை வைத்து ஏமாற்றி கல்யாணம் பண்ணினார்கள் என்று சொல்லி விவாகரத்து வாங்கிவிடலாம் என சொல்கிறார். இதை கேட்டதும் இனியா விவாகரத்தில் எனக்கு சில கண்டிஷன் இருக்கிறது.

அதாவது என்னுடைய வாழ்க்கை நல்லா இருக்கணும் நான் சந்தோசமாக இருக்கணும் என்று என்னுடைய அம்மா அவங்க கேட்ட வரதட்சணையாக இரண்டு ஹோட்டலை கொடுத்து விட்டார்கள். அதனால் மீண்டும் எங்களுக்கு அந்த ஹோட்டலை வாங்கி கொடுக்க வேண்டும். அத்துடன் கல்யாண செலவுக்காக செலவு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்க வேண்டும் என்று இனியா கண்டிஷன்னாக சொல்லிவிடுகிறார்.

உடனே லாயர் அதையும் வாங்கிவிடலாம் என்று சொல்லிவிடுகிறார். பிறகு இனியாவின் வாழ்க்கை நினைத்து பாக்யா, செல்விடம் ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். இனியா, அம்மாவை சமாதானம் செய்வதற்காக ஹோட்டலுக்கு போகிறார். ஆனால் பாக்கியா வெளியே போய் இருப்பதால் ஆகாஷ் எல்லா வேலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு செல்வி, இனியாவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இனியா தனியாக வந்து பீல் பண்ணி கொண்டிருக்கிறார். உடனே ஆகாஷ், இனியவை பார்த்து பேசுகிறார். அப்பொழுது இனிய மனதில் இருக்கும் கஷ்டத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறேன் என்று படும் கஷ்டத்தை ஆகாசிடம் ஓபன் ஆக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் நித்தீஷ் வந்து இவர்கள் இரண்டு பேரும் பேசுவதை பார்த்து விடுகிறார்.

உடனே பிரச்சினை பண்ணி இனியவை கூட்டிட்டு போவதற்கு முயற்சி எடுக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் பாக்கிய அங்கே வந்து நித்தீசை தடுத்து நிறுத்தி இனியாவை காப்பாற்றி விடுகிறார்.