Kalaiyarasan : நடிகர் கலையரசன் அவர்கள் சிறந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பேர்போன நடிகர். இவர் மெட்ராஸ் படத்தில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ளார்.
அதே போல “சார்பட்டா பரம்பரை” படத்திலும் இவரது கதாபாத்திரம் நன்றக பேசப்பட்டது. இவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்துவிடும். இது இவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமா அல்லது இவருக்கு நடிப்பிற்கு கிடைத்த வெகுமானம என்பது தெரியவில்லை.
ஆனால் இவரது எதிர்த்தமான நடிப்பு திறன் நம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில்தான் இருக்கும் என்பது நம் ஆணித்தரமாக ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. தற்போது வாழை படத்திலும் இவர் நடிப்பு நம்மை ரசிக்க வைத்தது.
ஆனால் இவர் தற்போது பேசியிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியிருக்கும் கருத்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. சாதி என்பது அணைத்து துறைகளிலும் தலை விரித்து கோரத்தாண்டவம் ஆடுவது என்பது அசைக்க முடியாத உண்மை.
சினிமாவிலும் சாதி பிரச்சினை..
சாதி அரசியல், கல்வித்துறை போன்று எல்லா இடத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது ஆனால் சினிமாத்துறை என்பது அனைவர்க்கும் பொதுவானது திறமைகளின் இடம் என்றுதான் நாம் நினைக்கிறோம் ஆனால் நடிகர் கலையரசனை பாதித்த சில விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
அதாவது நடிகர் கலையரசன் அவர்கள் தமிழ் சினிமாவில் சாதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் சாதிய பாகுபாடு மிக மோசமாக உள்ளது. நான் இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களுடன் இருப்பதால் அனைவரும் என்னை புறக்கணிக்கிறார்கள்.
இதனால் எனக்கு பட வாய்ப்புகளுக்காக சிலரை லைக்கா யோசிக்கிறார்கள் என தற்போது பேசியுள்ளார். இந்த செய்தி தமிழ் சினிமாத்துறையில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் உண்மையை சொல்றதுக்கும் தைரியம் வேணும்ல பாஸ்.