Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், ஒரு பொருள் பக்கத்தில் இருக்கும் பொழுது அதனுடைய அருமை தெரியாது. அந்த பொருள் நம்மிடம் இல்லாத பட்சத்தில் தான் அதற்காக ஏங்குவோம். அது மாதிரி தான் இதுவரை சேரன் மாமா, சேரன் மாமா என்று சுத்தி வந்த கார்த்திகாவின் காதலை புரிந்து கொண்டும் அதற்கு எந்தவித ரியாக்ஷன் கொடுக்காமல் இருந்த சேரன் தற்போது கார்த்திகாவுக்கு கல்யாணம் என்று தெரிந்ததும் மொத்தமாக உடைந்து போய்விட்டார்.
அதுவும் கார்த்திகா நம்மளை தேடி கல்யாணம் பண்ண சொல்லி வந்திருக்கும் பொழுது நாமே கார்த்திகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டோமோ என்று சேரன் ஃபீல் பண்ணுகிறார். அதனால் வேலை பார்க்கும் இடத்தில் சரியாக கவனம் செலுத்தாமல் தடுமாறுகிறார். சேரன் அண்ணா எந்த நிலைமையில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக வேலை பார்க்கும் இடத்திற்கு பல்லவனும் பாண்டியனும் வந்து பேசுகிறார்கள்.
அப்படி பேசும் பொழுது சேரன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் நன்றாக தான் இருக்கிறேன் என்று பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விடுகிறார். ஆனால் சேரன், மனதளவில் நொந்து போய் இருப்பதால் வீட்டிற்கு போகலாம் என்று வருகிறார். அப்படி வரும்பொழுது கார்த்திகா கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை உடன் வருவதை சேரன் பார்த்து பீல் பண்ணுகிறார்.
வீட்டிற்கு வந்ததும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். உடனே நிலா, சேரனிடம் என்ன ஆச்சு என்று கேட்ட பொழுது மொத்த காதலையும் வெளிப்படுத்தும் விதமாக கார்த்திகா மீது இருந்த ஆசையைப் பற்றி வெளிப்படையாக சொல்லுகிறார். அந்த அளவிற்கு சேரன் மனதில் கார்த்திகா இருக்கிறார் என்பது அவர் பீல் பண்ணும் விதத்தில் புரிந்து கொண்டது. பிறகு நிலா, சேரன் அண்ணாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு சமாதானப்படுத்துகிறார்.