சீரியஸ் மோடுக்கு மாறிய வடிவேலு.. இப்பவாவது உண்மையா புரிஞ்சுகிட்டா சரிதான்

Vadivelu: வடிவேலுவின் நகைச்சுவை குழந்தைகள் வரை வெகு பிரபலம். அதேபோல் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இவர்தான் குலசாமி மாதிரி. இப்போதும் கூட யாரையாவது கலாய்க்க வேண்டும் என்றால் இவருடைய டயலாக் தான் நமக்கு நினைவுக்கு வரும்.

அப்படி இருந்த மனுஷன் கடந்த சில வருடங்களாக அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சினிமாவில் நடிப்பதற்கு இருந்த தடைகளை தாண்டி தற்போது இவர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.

ஆனால் முன்பு போல் இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. ஒரு காலத்தில் வடிவேலு வசனம் பேசாமல் குறுகுறுன்னு பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு அவருடைய பாடி லாங்குவேஜ் இருக்கும்.

ஆனால் இப்போது அவர் என்ன செய்தாலும் சிரிப்பு மட்டும் வர மாட்டேங்குது. அதனாலேயே அவர் இப்போது தன்னுடைய ரூட்டை மாற்றி விட்டார். இதற்கு மாமன்னன் முக்கிய காரணமாக இருக்கிறது.

சீரியஸ் மோடுக்கு மாறிய வடிவேலு

அதில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வடிவேலு அசத்தி இருப்பார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் வொர்க் அவுட் ஆகவில்லை.

அதனால் மீண்டும் சீரியஸ் கதாபாத்திரத்தை அவர் கமிட் செய்ய தொடங்கி விட்டார். அப்படித்தான் தற்போது பகத் பாஸில் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் படம் உருவாகி இருக்கிறது.

சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது படம் சம்பந்தப்பட்ட மற்றொரு ரகசியம் கசிந்துள்ளது.

அதாவது இப்படத்தில் வடிவேலு முழுக்க முழுக்க சீரியஸாக நடித்திருக்கிறாராம். மாமன்னன் போலவே இந்த கதாபாத்திரமும் அவர் பெயர் சொல்லும் என்கின்றனர். ஆனால் பகத் பாசில் கேரக்டர் ஜாலியாக இருக்கும்.

இப்படிப்பட்ட இருவர்கள் இணைந்து பயணிப்பது போன்று கதை உருவாகி இருக்கிறது. அதேபோல் வடிவேலு காமெடியை ஓரங்கட்டிவிட்டு இப்படியே குணச்சித்திர கேரக்டர்களை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்பதும் ஆடியன்ஸ் கருத்து.