டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்திற்கு வந்த பார்ட் 2 சீரியல்.. கொடிகட்டி பறக்கும் சன் டிவி சீரியல்கள்

Serial Trp Rating List: சின்னத்திரை சீரியலை பொருத்தவரை எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியலை பற்றி பார்க்கலாம்.

எதிர்நீச்சல் 2: இப்படிப்பட்ட ஒரு கதையை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்பதற்கு ஏற்ப சீரியல் விறுவிறுப்பாக வர ஆரம்பித்துவிட்டது. குணசேகரன் கும்பலை மொத்தமாக அடக்குவதற்கு பெண்கள் தயாராகி விட்டார்கள். வாத்தியார் இறப்பிற்கு நியாயம் வாங்கிக் கொடுக்கும் விதமாக ஜனனி போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதனால் குணசேகரன் மொத்தமாக ஆடிப் போயிருக்கிறார். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 7.93 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: பிரபுவின் தம்பி கார்த்திக், சத்யா கழுத்தில் தாலி கட்டியதால் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. கார்த்திக்கை போலீஸ் வந்து கூட்டிட்டு போய்விடுகிறார். கார்த்திக்கை வெளியே கூட்டிட்டு வரும் முயற்சியில் பிரபு மற்றும் ஆதிரை போராடுகிறார்கள். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 8.21 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

கயல்: இந்த சீரியலை பொறுத்தவரை எப்பொழுதுதான் பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்பதை விட அதே பிரச்சினையை காட்டி கயல் அந்த குடும்பத்திற்காக போராடுவது போல் அரைச்ச மாவை அரைத்து கொண்டு வருகிறார்கள். ஆனால் பாவம் தெரியாத்தனமாக கயலிடமும் இந்த குடும்பத்திடமும் மாட்டிக் கொண்டு எழில் முழித்துக் கொண்டு வருகிறார். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 9.13 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: தொடர்ந்து நந்தினியை யாராவது கடத்துவதும் சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிப்பதும் நந்தினியை காப்பாற்றும் விதமாக சூர்யா முயற்சி எடுப்பதும் இதே போல தான் கதை வருகின்றது. ஆனால் கடைசிவரை நந்தினிக்கும் சூர்யாவுக்கும் காதலும் வரவில்லை, திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்பதற்கு ஏற்ப கதை நகர்ந்து வருகிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 9.55 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: அக்காவின் கல்யாணத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று ஆனந்தி கர்ப்பமான விஷயத்தை மறைத்துக் கொண்டு செவரக்கோட்டைக்கு வந்திருக்கிறார். அதே கல்யாணத்திற்கு அன்பும் வந்திருக்கிறார், வந்த இடத்தில் இப்படியாவது ஆனந்திக் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று அன்பு முடிவெடுத்து இருக்கிறார். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 9.85 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.