Serial: விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமான ஆல்யா, நடித்த முதல் நாடகத்திலேயே தனக்கான ஒரு முத்திரையை பதித்து விட்டார். அத்துடன் இவருடன் இணைந்து நடித்த சஞ்சீவையும் காதல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் விஜய் டிவியில் இருந்து சன் டிவி சீரியல் ஆன இனியா என்ற சீரியல் மூலம் அடி எடுத்து வைத்தார்.
அதிலும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததால் அந்த நாடகம் வெற்றி பெற்றது. ஆனாலும் அது ப்ரைம் டைம் இல்லாததால் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க முடியவில்லை. அதனால் அந்த சீரியலை முடித்து விட்டார்கள். பிறகு சோசியல் மீடியாவில் பிரபலமாகி வந்தார்.
ஆனாலும் சீரியலில் எதுவும் கமிட்டாகாமல் இருந்ததால் மக்கள் எப்பொழுது உங்களை சீரியலில் பார்க்கலாம் என்று ஆல்யாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார்கள். அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக ஆல்யா தற்போது புத்தம் புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். இதற்கான பட பூஜை எல்லாம் நேற்று முடிந்து விட்ட நிலையில் அடுத்து சீரியலும் ஆரம்பமாகப் போகிறது.
ஆனால் இந்த முறை விஜய் டிவி மற்றும் சன் டிவி சேனலில் இல்லை. அதற்கு பதிலாக ஜீ தமிழில் முதன்முதலாக சீரியலில் வரப்போகிறார். இவருடன் ராஜ்கமல் லதாராவ், மெட்டிஒலி ராஜ்காந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
அத்துடன் இந்த கதையும் குடும்ப பாரங்களை சுமக்கும் ஒரு தனிப்பட்ட பெண்ணின் போராட்டங்களாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வருஷமாக சீரியலில் நடிக்காமல் இருந்த ஆல்யாவுக்கு தற்போது ஜீ தமிழ் மூலம் ஜாக்பாட் அடித்திருக்கிறது.