தனுஷ் சிம்பு பிரச்சனையை முடித்து வைத்த வெற்றிமாறன்.. கெத்தா கொடுத்த Entry

Vetrimaran : இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை கொடுத்து பிரபலமானவர். இவர் இயக்கக்கூடிய படங்கள் அனைத்துமே கொஞ்சம் தாறுமாறாகவே இருக்கும்.

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் அவர்களின் கூட்டணி முடிந்தவரையில் ஒரு வெற்றி கூட்டணி ஆகவே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு பாராட்டக்கூடிய உறவும் இருக்கிறது.

தற்போது தனுஷ் நடிக்கவிருந்த வடசென்னை-2 வில் சிம்பு நடிக்க இருப்பதாக எழுந்து வந்த தகவல்கள் உறுதியான நிலையில் வெற்றிமாறனுக்கும் தனுசுக்கும் ஏதாவது பிரச்சனையா என தகவல்கள் எழுந்தது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷ் அவர்கள் வெற்றிமாறனிடம் வடசென்னை -2 படப்பிடிப்பிற்காக கோடிக்கணக்கில் பணம் கேட்டிருக்கிறார் என்ற தகவலும் எழுந்தது. இவ்வாறாக தனுஷ், சிம்பு மற்றும் வெற்றிமாறன் அவர்களுக்கு இடையே பிரச்சனை எழுகிறது என தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் அளித்த பேட்டியில் தனுஷ் அவர்கள் அப்படி எதுவும் பணம் கேட்கவில்லை. வடசென்னை 2 படத்தை எடுப்பதற்காக தனுஷ் அவர்கள் முழு ஒப்புதல் அளித்து விட்டார் என்ற செய்தியை உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால் எவ்வளவுதான் உறுதிப்படுத்தி இருந்தாலும் திரை வட்டாரத்தில் சிறு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

வெற்றிமாறன் கெத்தா கொடுத்த என்ட்ரி..

அதையெல்லாம் தவிடுப்படி ஆக்கும் விதமாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D 54 படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வெற்றி மாறன் கெத்தா மாஸ் என்ட்ரி கொடுத்து கலந்து கொண்டு பூஜையினை சிறப்பித்துக் கொடுத்திருக்கிறார்.

இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை வெளியாகி உள்ளன. இதன் மூலம் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரிக்கிடையே உண்மையிலேயே எந்த பிரச்சனையும் இல்லை என்று திட்டவட்டமாக நமக்கு தெரிகிறது.