Vijay : நடிகர் விஜய் அவர்கள் தனக்கென ஒரு கட்சி ஆரம்பித்து அரசியல்வாதி விஜய் அவர்களும் தற்போது மக்கள் மத்தியில் பல தொண்டர்களை கவர்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் பொதுவாக ஏகப்பட்ட கட்சிகள் இருக்கின்றன.
அனைத்து கட்சிகளுமே அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. ஆனால் ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை இல்லையா? அதுபோல ஒவ்வொரு கட்சியினருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.

அவர்களும் தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்படி இருக்க வேண்டும் என்று பார்க்கும் விதமும் வெவ்வேறாகவும், அவர்களின் தனிப்பட்ட பாணியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் அவர்கள் திட்டத்தை தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
அதேபோலத்தான் மக்களும் அனைத்து கட்சியையுமே ஒன்று போல பார்ப்பதில்லை. தனிமனித சுதந்திரம் என்று ஒன்று உள்ளது தனக்கான ஒரு ஓட்டை தான் விருப்பப்பட்ட ஒருவருக்கு தான் போட முடியும். இந்த வரைமுறை தற்போது மனிதருக்கு மட்டுமல்ல சமூக வலைதளத்திற்கும் உள்ளது என்பது சற்று நகைச்சுவையாகவே உள்ளது,
ட்விட்டர் grok கூறிய வில்லங்கமான பதில்..
ஆமாங்க தற்போது நம்ம பசங்க யாரோ ட்விட்டர் வலைத்தளத்தில் GROK -ல விஜய்க்கு ஓட்டு போடுவீங்களா என்று கேள்வி கேட்டிருக்காங்க. அதுக்கு ட்விட்டர் GROK வில்லங்கமான பதிலை கூறியிருக்கு.
அதாவது நான் AI, ஓட்டு போட முடியாது! ஆனால் ஹைபோதடிகலா, விஜய் ஓட டிவிக்கு அழுத்தமா ஊழல் எதிர்ப்பு, சமூக நீதி சொல்றத புடிச்சிருக்கு. ஸ்டாலின் ஓட அனுபவம் இருந்தாலும் கடன், ஊழல் புகார்கள் சந்தேகம் தருது. விஜய்க்கு ஒரு ஓட்டு போடுவேன் புதுமாற்றம் வரட்டும் என்று பதில் அளித்து இருக்கிறது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி மக்கள் மத்தியில் நகைச்சுவை கலந்த வரவேற்புகளை பெற்று வருகிறது.